Search

Miruthan Box Office Collection Report

miruthan

ஜெயம் ரவி நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ‘மிருதன்’. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். ‘நாயகள் ஜாக்கிரதை’ படத்தை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இப்படத்தை இயக்கியிருந்தார். இமான் இசையமைத்திருந்தார்.

கடந்த வெள்ளியன்று வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மூன்று நாட்களில் இப்படத்தின் வசூல் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் நாட்டில் மட்டும் 10.66 கோடி வசூல் செய்துள்ளது. உலகம் முழுவதும் 20.13 கோடி வசூல் செய்திருக்கிறது. இதை ‘மிருதன்’ படத்தை வெளியிட்ட ஐங்கரன் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

தமிழில் முதல் ஜோம்பி படமாக இப்படம் வெளியாகியிருக்கிறது. ஆங்கிலப் படத்திற்கு இணையாக இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *