Search

Madhavan to play as Boxer in his next flick

madhavan

கோலிவுட் மற்றும் பாலிவுட்டில் கால்பதித்து வெற்றியடைந்த நடிகர் மாதவன் ஹாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகிவரும் ‘நைட் ஆப் தி லிவிட் டெட்’ படத்தில் நடித்து முடித்துவிட்டார். இந்நிலையில், அடுத்ததாக இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுதா கொங்கராவின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் மாதவன் ஓய்வு பெற்ற குத்துச் சண்டை வீரராக நடிக்கிறாராம்.

குத்து சண்டை வீரர் கதாபாத்திரத்திற்காக ஹாலிவுட் நடிகர்களுக்கு பயிற்சியளிப்பவர்களிடம் அமெச்சூர் குத்துச் சண்டை கற்று வருகிறார். இந்த படத்தில் மாதவன் நீண்ட தலைமுடியுடனும், தாடியுடனும், வலிமையான உடல்வாகுடனும் தோன்றுகின்றார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் தொழில்முறை குத்துச் சண்டை வீரர்களும் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தில் அவருடைய கதாபாத்திரம் பற்றிக் கேட்டபோது, முதன்முதலாக குத்துச் சண்டை மேடையில் ஏறியபோது தன்னால் ஒரு நிமிடம்கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை என்றார். உடல்ரீதியாக மிகவும் சவாலான கதாபாத்திரம் இது. இதற்காக நான் அதிக நேரம் உடற்பயிற்சி செய்து வருகிறேன் என்றார். இந்த வருடம் டிசம்பர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *