Search

I m not Interested to Take Award Films – Director Hari

hari

கமர்சியல் பட டைரக்டர் என்ற முத்திரையில் இருப்பவர் ஹரி. சாமி, அருள், அய்யா, ஆறு, தாமிரபரணி, சிங்கம் உள்பட பல படங்கள் எடுத்துள்ளார்.

தற்போது விஷாலை வைத்து ‘பூஜை’ படத்தை இயக்கி வருகிறார். விருது படங்கள் எடுப்பீர்களா? என்று ஹரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

விருது படங்களை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. அது மாதிரியான நல்ல படங்களை கொடுக்க டைரக்டர் பாலா இருக்கிறார். உலக அளவில் பாராட்டக்கூடிய பிரமாண்ட படங்களை எடுப்பதற்கு ஷங்கர் இருக்கிறார். கமர்சியல், மசாலா படங்கள் எடுக்கவும் ஆள் வேண்டும். அதற்கு நான் இருக்கிறேன்.

எனக்கு கமர்சியல் படங்கள் எடுக்கத்தான் தெரியும். என் படத்தில் அரிவாள், டாட்டா சுமோ பறக்கும் காட்சிகள் இருக்கும். தென் மாவட்டங்களில் ஒருத்தருக்கு ஒருத்தர் முறைத்துக் கொண்டு தான் திரிகிறார்கள். அதுதான் என் கண்ணில் படுகிறது. அதையே படமாக்குகிறேன்.

‘பூஜை’ படமும் கமர்சியல் படம்தான். மாடர்ன் காதல், குடும்ப சென்டிமென்ட், ஆக்‌ஷன் கலவையாக வந்துள்ளது. சண்டைகள் யதார்த்தமாக இருக்கும். நிறைய மெனக்கெட்டு படத்தை எடுத்துள்ளோம். குடும்பத்தோடு பார்க்கும்படி படம் வந்துள்ளது. நிறைய செலவு செய்து இருக்கிறோம். எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர். தீபாவளிக்கு படம் வருகிறது.

இவ்வாறு ஹரி கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *