‘சிங்கம் 2’ படத்துக்கு பிறகு இயக்குனர் ஹரி தெலுங்கு படம் இயக்குவதாக தகவல் வெளியானது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது கூறியதாவது:
‘சிங்கம் 2’ படத்துக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் படத்தை இயக்க முடிவு செய்திருந்தேன். கார்த்தி வேறு சில படங்களில் பிசியாக இருப்பதால், தற்போது கதைகள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். தெலுங்கு படம் இயக்குவதாக வரும் தகவல்களில் உண்மை இல்லை. விஜய்யை வைத்தும் படம் இயக்கவில்லை’ என்றார்.
Previous PostStudies and Acting are Fun Now - Padmapriya
Next PostHollywood Tiger act in Panivizhum Malarvanam Film