Search

I m become famous by acting with big Heros – Tamannah

tamannah

முன்னணி ஹீரோக்கள் படங்களில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருப்பது இல்லை என்றும் காதலுக்கும் டூயட் பாடலுக்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றனர் என்றும் சில நடிகைகள் ஆதங்கப்படுகின்றனர். ஆனால் தமன்னா இதை மறுக்கிறார். பெரிய ஹீரோக்களுடன் நடித்தால்தான் பிரபலமாக முடியும் என்றார்.

அவர் அளித்த பேட்டி வருமாறு:

அருந்ததி மாதிரி படங்களில் நடித்துதான் நடிகைகள் பிரபலமாக முடியும் என்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்தும் முன்னணிக்கு வரமுடியும். என்னை பொறுத்தவரை தமிழ், தெலுங்கு படங்களில் பெரிய ஹீரோக்களுடன் நடித்தே வளர்ந்துள்ளேன்.

பிரபல ஹீரோக்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களோடு நடிக்கும் போது ரசிகர்கள் எளிதாக நம்மை ஏற்றுக்கொள்வார்கள். பெரிய விளம்பரமும் கிடைக்கும்.

பெரிய ஹீரோக்கள் படங்களில் கதாநாயகிகளுக்கு நடிக்க வாய்ப்பு இருக்காது என்பது உண்மைதான். கதாநாயகர்களை சுற்றியே கதை இருக்கும். அவர்களுக்குதான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதே நேரம் அந்த படங்களில் கதாநாயகிகள் சிறிது நேரம் நடித்தாலும் ரசிகர்களை எளிதாக சென்றடைய முடியும், புகழும் கிடைக்கும். எனவே நான் முன்னணி ஹீரோக்கள் ஜோடியாக நடிக்க விரும்புகிறேன். அருந்ததி மாதிரி படவாய்ப்புகள் வந்தாலும் நடிப்பேன்.

இவ்வாறு தமன்னா கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *