Search

I m not asked Vikram to reduce Weight says Shankar

ai posters

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘ஐ’ படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. மிகப்பெரிய பிரம்மாண்டத்துடன் உருவாகியுள்ள இப்படத்தில் விக்ரம் நான்கு விதமான தோற்றத்தில் நடித்துள்ளார்.

பாடி பில்டர் போன்ற ஒரு தோற்றத்திலும், ஸ்டைலான ஒரு தோற்றத்திலும், மிருகம் போன்ற ஒரு தோற்றத்திலும், அருவருக்கத்தக்க முகத்துடன் கூடிய ஒரு தோற்றத்திலும் நடித்துள்ளார்.

அருவருக்கத்தக்க முகத்துடன் கூடிய தோற்றத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை பாதிக்கும் மேல் குறைத்து நடித்துள்ளார். விக்ரம் உடல் எடையை குறைக்க ஷங்கர்தான் வலியுறுத்தினார் என்று கூறப்பட்டது. இதனை ஷங்கர் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, அருவருக்கத்தக்க முகத்துடன் கூடிய தோற்றத்தில் நடிப்பதற்காக முதலில் விக்ரமை நான் அணுகும்போது, மேக்கப் மட்டும் இருந்தால்போதும் என்று கூறினேன். ஆனால், அவரோ இந்த கதாபாத்திரத்திற்காக எனது உடல் எடையை குறைக்கிறேன். அப்படிக் குறைத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்.

நானும் யோசித்துவிட்டு பிறகு சொல்கிறேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டேன். நானும் யோசித்துப் பார்த்தபோது, உடல் எடையை குறைத்தால் அந்த கதாபாத்திரத்திற்கு நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

பிறகு அவரிடம் சென்று எனக்கு உங்களுடைய உடல் நிலைதான் முக்கியம். உடம்பை குறைப்பதில் உங்களுக்கு சிரமம் இல்லையென்றால் எனக்கு திருப்திதான் என்று சொன்னேன். அவரும், டாக்டர்கள் மற்றும் டயட்டீசியன் ஆகியோரிடம் ஆலோசனை கேட்டு தனது உடல் எடையை குறைத்தார். அவருடைய இந்த புதிய முயற்சி அவருக்கு நல்ல ஒரு திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *