Search

Love with hindi Director Saaji Khan? tamanna denial

Sajkha

 

 

தமன்னா, இந்தி டைரக்டரை காதலிப்பதாக செய்திகள் பரவி உள்ளன. ‘ஹம்சகல்ஸ்’ என்ற இந்தி படத்தில் தமன்னா நடிக்கிறார். இந்த படத்தை சாஜித்கான் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பில் தமன்னாவுக்கும் சாஜித்கானுக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும் அடிக்கடி இருவரும் தனியாக சந்தித்து காதல் வளர்ப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவின.

இதுகுறித்து தமன்னாவிடம் கேட்ட போது மறுத்தார்.

அவர் கூறியதாவது:–

சாஜித்கானை நான் காதலிப்பதாக வெளியான செய்தியில் உண்மை இல்லை. எங்களுக்குள் அப்படி உறவு எதுவும் கிடையாது. சாஜித்கான் எனக்கு சகோதரர் போன்றவர். யாரையும் நான் காதலிக்கவில்லை. தற்போதைய நிலையில் நான் சந்தோஷமாக இருக்கிறேன். அதனை குலைக்க மாட்டேன். சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன். எனது முழு கவனமும் நடிப்பில்தான் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஹம்சகல்ஸ் படத்தில் சயீப் அலிகான் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். இதில் பிபாசாபாசுவும் முக்கிய கேரக்டரில் வருகிறார். இவைதவிர இரண்டு தெலுங்கு படங்களும் தமன்னா கைவசம் உள்ளன. தமிழ் படத்தில் நடிக்கவும் கதை கேட்கிறார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *