Search

Lingaa Audio Rights Bought by Eros International

linga new

ரஜினி இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘லிங்கா’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கிறது. இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி வருகிறார். ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் ஆடியோவை நவம்பர் 9-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ உரிமையை ஈராஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

பாலிவுட்டில் பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்த ஈராஸ் நிறுவனம், ‘கோச்சடையான்’ படம் மூலம் கோலிவுட்டில் கால்பதித்தது. இந்நிலையில், சமீபத்தில் தென்னிந்தியாவில் தனது கிளையை துவக்கிய ஈராஸ் நிறுவனம், அந்நிறுவனத்தின் மேலாளராக ரஜினியின் இளைய மகளும், இயக்குனருமான சௌந்தர்யா ரஜினிகாந்தை நியமித்தது.

இவருடைய முயற்சியால், இந்நிறுவனம் முதன்முதலாக ‘கத்தி’ படத்தின் ஆடியோ உரிமையை வாங்கி, அதற்கு மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்தது. இந்நிலையில், தற்போது ‘லிங்கா’ படத்தின் ஆடியோ உரிமையையும் பெற்றுள்ள ஈராஸ் நிறுவனம், இப்படத்தின் ஆடியோவையும் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

‘லிங்கா’ படத்தை ராக்லைன் வெங்கடேஷ் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடலை வைரமுத்து எழுதியுள்ளார். அப்பாடலுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரல் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *