Search

Life film against Priyanka Chopra notice to producer

Pri

 

 

தனது வாழ்க்கை கதையை படமாக எடுப்பதற்கு பிரியங்கா சோப்ரா எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இந்தியில் பிரியங்கா சோப்ரா முன்னணி நடிகையாக இருக்கிறார். இவரை பல நடிகர்களுடன் இணைத்து கிசுகிசுக்கள் வந்துள்ளன.

இந்த நிலையில் பிரியங்கா சோப்ராவின் வாழ்க்கையை பிரகாஷ் ஷாசு என்பவர் படமாக எடுப்பதாக தகவல் வெளியாகியது. இவர் பிரியங்கா சோப்ராவிடம் ஏற்கனவே மானேஜராக பணியாற்றியவர். இப்படத்தை அசீம் என்பவர் தயாரிக்கிறார். இவர் பிரியங்கா சோப்ராவின் முன்னாள் காதலர் ஆவார். பிரியங்கா உலக அழகியாக தேர்வான போது இருவரும் காதலிப்பதாக செய்திகள் வந்தன.

தனது வாழ்க்கையை படமாக எடுப்பதை கைவிட வேண்டும் என வற்புறுத்தி அசீமுக்கு பிரியங்கா சோப்ரா வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

எனது வாழ்க்கையை படமாக எடுக்கும் தகவல் எனக்கு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. இது என் நற்பெயருக்கு களங்கும் ஏற்படுத்தும் அவதூறு ஆகும். இந்த படத்தை கைவிட வேண்டும் என்று நோட்டீசில் குறிப்பிட்டு உள்ளார்.

பிரியங்கா சோப்ராவின் முன்னாள் மானேஜர் ஷாசு கூறும்போது, எனது வாழ்க்கையை தான் படமாக எடுக்கிறேன். பிரியங்கா சோப்ராவை புண்படுத்தும் வகையில் இப்படத்தை எடுக்கவில்லை என்றார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *