Search

Lekha Foods – Write & Win Recipe Contest

லேகா ஃபுட்ஸ் நிறுவனத்தின் WRITE & WIN – RECIPE CONTEST

Write & Win Recipe Contest from Lekha Foods

Write & Win Recipe Contest from Lekha Foods

விளம்பரப் பட உலகில் ஏராளமான விளம்பரப் படங்களை இயக்கி, அவற்றில் தனித் திறமையைக் காட்டி சிறப்பான பெயரைப் பெற்றிருப்பவர் லேகா ரத்னகுமார். இது தவிர, உலக நாடுகளின் இசையை ஒரே கூரைக்குக் கீழே கொண்டு வந்து, படவுலகிற்கு பயனுள்ள காரியத்தை அவர் செய்து கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் அவரின் சிந்தனையில் உண்டானதே lekhafoods.com இணைய தளம்.

லேகாஃபுட்ஸ்.காம் (lekhafoods.com) – இணையதள உலகத்தில் இன்று அனைவராலும் பரபரப்புடன் பேசப்பட்டுக் கொண்டிருக்கும் உணவிற்கான இணைய தளம் இதுதான். உலகத்திலுள்ள எல்லா நாடுகளின் உணவு வகைகளைப் பற்றிய தகவல்களைக் கொண்ட மிகச் சிறந்த இணைய தளம் இது. பல நாட்டு உணவுகளையும் தங்களின் வீடுகளில் இருந்து கொண்டே, யாருடைய உதவியும் இல்லாமல் தங்களுடைய ரசனைக்கு ஏற்றபடி இந்த இணைய தளத்தைப் பார்த்து, சமையல் செய்து சாப்பிட்டு, ருசித்து மகிழலாம்.

நம் நாட்டைச் சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் சாஃப்ட்வேர் தொழிலில் உலகெங்கும் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். தாங்களே சமையல் செய்து சாப்பிட வேண்டிய நிலை அவர்களுக்கு. இந்த விஷயத்தில் எந்தவித சிரமமும் இல்லாமல் மிகவும் எளிதில் அவர்கள் சமையல் செய்வதற்கு உதவியாக இருக்கிறது lekhafoods.com.

உலக மக்கள் ஏராளமாக பார்த்து, பயன்படுத்திக் கொண்டிருக்கும் lekhafoods.com இப்போது புதிய ஒரு போட்டியை அறிவித்திருக்கிறது. WRITE & WIN என்ற இந்தப் போட்டியில் சமையலில் ஆர்வம் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் பங்கு பெறலாம். தங்களுடைய சொந்த சமையல் குறிப்புகளை அவர்கள் office@lekhafoods.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஆங்கிலத்தில் எழுதி அனுப்ப வேண்டும். அதனால் தங்கள் சமையல் குறிப்புகளை எழுதுவதற்கு முன்னால், lekhafoods.com இணையதளத்தில் இடம் பெற்றிருக்கும் சமையல் குறிப்புகளை ஒருமுறை அவர்கள் பார்த்து, தெரிந்து கொள்வது நல்லது. lekhafoods.com இணைய தளத்தில் ஏற்கெனவே இடம் பெறாத வகையில், சமையல் குறிப்புகளை எழுதி அனுப்புவோரின் உணவு வகைகள் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.

சிறந்த சமையல் குறிப்பு எழுதி வெற்றி பெறுபவருக்கு 22,000 ரூபாய் மதிப்புள்ள Samsung Galaxy Grand Smart Phone பரிசாக அளிக்கப்படும்.

பரிசைப் பெறுவதற்கு, உடனடியாக செயல்படுங்கள்… ஆர்வத்துடன் உங்களின் தனித்துவம் கொண்ட சமையல் குறிப்புகளை ஆங்கிலத்தில் office@lekhafoods.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்புங்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *