Search

Lakshmi Menon interested to study IAS

lakshmi-menon

நடிகை லட்சுமி மேனன் பாண்டியநாடு பட விழாவில் கலந்து கொள்வதற்காக கோவை வந்தார். அவர் நிருபரிடம் கூறியதாவது:– எனது சொந்த ஊர் கேரள மாநிலம் கொச்சி. நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே அங்கேதான். என் வாழ்க்கையில் நான் சினிமாவில் நடிப்பேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. 8–ம் வகுப்பு படிக்கும் வரை என்னுடைய கனவு ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்பதுதான். ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை. எதிர்பாராத விதமாக கலைத் துறைக்கு வந்து விட்டேன். இப்போது முன்னனி நடிகைகளில் ஒருவராக இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. என்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்த தமிழ் ரசிகர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் ரசிகர்கள் மிகவும் அன்பும், பாசமும் உடையவர்கள். நான் எந்த நடிகைகளுடனும் என்னை ஒப்பிட மாட்டேன். எனக்கு நிகர் நானேதான். நான் கவர்ச்சியாக அரை குறை ஆடைகளில் நடிக்க மாட்டேன். ‘ஆக்ஷன்’ படங்களிலும் நடிக்க எனக்கு விருப்பமில்லை. ‘ஜிகர்தண்டா, மஞ்சப்பை, சிப்பாய், நான் சிகப்பு மனிதன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். நான் இது வரை நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த சினிமா கும்கி. நான் பள்ளி பருவத்தில் இருந்தே நடிகை சூர்யாவின் தீவிர ரசிகை. சூர்யாவின் சிரிப்பு மற்றும் கண்களை மிகவும் ரசிப்பேன். அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வேன். நடிகர் விக்ரமின் நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது. நடிகர் அஜித்தின் ஸ்டைல் மிகவும் பிடிக்கும். சினிமா படப்பிடிப்பு முடிந்ததும் வீட்டுக்கு சென்று மகிழ்ச்சியாக இருப்பேன். தற்போது நான் பிளஸ்–1 படித்து வருகிறேன். குறைந்தது பட்டப்படிப்பாவது முடிக்க வேண்டும் என்பது எனது ஆசை.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *