Search

Kolakalam Movie Press Release

kolakalam-movie-stills-1

மௌனம்ரவி
கோலாகலம் படத்திற்கு
“ யு “சான்றிதழ்
பி.ஜி.எஸ் பிலிம் இன்டர்நேஷனல் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக பி.ஜி. சுரேந்திரன் கதை திரைக்கதை , வசனம் எழுதி தயாரித்து இயக்கும் படம் ‘கோலாகலம்’என்றுபெயரிட்டுள்ளார்.
இந்த படத்தில் அமல் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார்.
கதாநாயகியாக சரண்யா மோகன் நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, தேவதர்ஷினி, மீரா கிருஷ்ணன், வியட்நாம் வீடு சுந்தரம், மனோபாலா, விகேஆர் ரகு, விஷவாந்த் என்ற வில்லன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – கே.எஸ். செல்வராஜ்
இசை – பரணி
பாடல்கள் – விவேகா
கலை – ராஜா
நடனம் – சிவசங்கர், ராபர்ட், அசோக்ராஜா
ஸ்டன்ட் – தளபதி தினேஷ்
எடிட்டிங் – சுரேஷ் அர்ஸ்
தயாரிப்பு நிர்வாகம் – கண்ணதாசன்
படம் பற்றி இயக்குனர் பி.ஜி.சுரேந்திரன் கூறியதாவது…
படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ஒரு கட் கூட இல்லாமல் “ யு “சான்றிதழ் கொடுத்தனர்.அத்துடன் இல்லாமல் இது உங்களுக்கு முதல் படம்ன்னு சொல்ல முடியாத அளவுக்கு திறமையா எடுத்திருக்கீங்க என்று வாழ்த்தினார்கள்.
அத்துடன் வரிவிலக்குக்காகப் பார்த்த குழுவினரும் பாராட்டு தெரிவித்ததுடன் வரிவிலக்கும் கொடுத்தது எங்களுக்கு ரொம்பவும் சந்தோஷம்.
வரிவிலக்கு குழுவில் இடம் பெற்றிருந்த பிரபல இயக்குனர் பி.வாசு பரவாயில்லையே முதல் படத்தையே சிறப்பான படமாக எடுத்திருக்கீங்க என்று வாழ்த்து தெரிவித்தார்கள்.
“கோலாகலம்” படத்தின் டிரெயிலர் 234 தியேட்டர்களில் 29 ந் தேதி முதல் திரையிடப் பட உள்ளது.
எல்லா தரப்பினரும் பார்க்கும் விதமான படமாக கோலாகலம் இருக்கும் என்றார் பி.ஜி.சுரேந்திரன்




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *