Search

Kochadaiiyaan releasing in Maximum Number of Screens at Japan

kochadaiiyaan

தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடித்து அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஷ்வின் இயக்கி வெளிவந்துள்ள ‘கோச்சடையான்’ மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது மோஷன் கேப்சர் எனப்படும் புதிய தொழில்நுட்பம் மூலம் தயாரான திரைப்படம் ஆகும்.

அமெரிக்காவில் திரையிடப்பட்ட இந்தப் படத்தைப் பார்வையிட்ட சிறப்பு ஒளிப்பதிவில் புகழ் வாய்ந்த முன்னணி ஹாலிவுட் நிறுவனம் ஒன்று இந்தப் படம் இந்தியாவில் தயாரானது என்பதை அறிந்து வியப்பைத் தெரிவித்துள்ளது. படம் பார்த்த அமெரிக்க ரசிகர்கள் எழுந்து நின்று பலத்த கைதட்டலுடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

திரைக்கு வந்து மூன்றாவது வாரத்தைத் தொட்டுள்ள இந்தப் படம் தென் இந்தியாவில் 350 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த மாத இறுதியில் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் திரைப்பட நிறுவனத்தில் இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளது. அதேபோல் ரஜினிக்கு அதிகமான ரசிகர்கள் உள்ள ஜப்பானிலும் இந்தப் படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதுமட்டுமின்றி உலகம் முழுவதும் நடைபெறும் திரைப்பட விழாக்களில் திரையிடுவதற்கும் கோச்சடையானுக்கு அழைப்பு வந்துள்ளதாகத் திரையுலகத் தகவல்கள் கூறுகின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *