Search

Kaviyathalaivan Movie Press Release

kaaviyathalaivan-press-release

KAVIYA THALAIVAN

Following the success of both critically and commercially acclaimed movies such as Veyil, Angadi theru and Aravaan, Mr.Vasanta balan’s next venture under his direction has been titled as “Kaviya Thalaivan”.
Vasanta balans feature film “Veyil “holds the following credits , such as the National award for the Regional Language movie, three Film fare awards, Tamilnadu state award for the Best Feature Film, also it has been nominated by the Indian Panaroma and moreover considered to be the first tamil feature film to get official screened at the prestigious Cannes International Film Festival.
Further this movie got special screenings in various film festivals all over the world. Also, adding a feather to its cap, this movie was proclaimed by “Child Welfare Associations” on the perception of awareness regarding child abusement exposed in a different way. More to this, Veyil has been made as a subject in Film studies for the film students at SRM film school.
Vasantha balan’s “Angadi theru” has won three film-fare awards and also been nominated by the Indian Panorama of film festivals in different categories. Angadi theru has won the state award for Best Feature Film by Puducherry government. Also, this movie has been short listed in the selection panel for nominating to the Oscar award from india.
Followed by the success of Veyil, Angadi theru and Aravaan, “Kaviya thalaivan” is the next big release from the established film maker Mr.Vasantha balan.
The protagonist of this film was played by the popular actor of south-india, Mr.siddharth, who has made his debut in “Boys” movie and continued to be a well-known actor in tamil, telugu as well as hindi. After the continuous hits of kadhalil sothapuvathu eppadi , udhayam NH4, theeya vaelai seiyyanum kumaru, this movie “Kaviyathalaivan” is the most expected film for Mr.siddharth as a lead actor.
The lead role for female has been played by Miss. vedhika, who has been noted for her previous roles in kaalai, Muni, Chakrakatti and Paradesi etc.
Also the other female lead role has been played by the new comer for tamil film industry, Miss.Anaika soti, who has already made a debut in Ramgopal varma’s Satya-2 in Hindi.
More importantly the other lead role for the male has been played by the well-known Malayalam young superstar Mr.Prithviraj, who already holds the credit of playing hero in various tamil movies such as Mozhi, Kana kandaen, Ravanan, Paari jatham, Ninaithale inikkum and Kannampoochi ennada etc.
The supporting roles in the movie has been played by Nasser, Thambi ramaiyah, Singam puli, Pon vannan, Mansoor ali khan, Babu antony, Karikaalan, Kuyili, Director T.P. Gajendran, Kottachi, Azhagi George and some of the other fine actors.
“Kaviya thalaivan” is a celluloid poem based on the lives of theatre artists who lived during the pre-independence period of India. Hence, the golden era of those theatre artists and their portrayal of patriotism during the independence struggle plays an important chapter in this film.
The most celebrated and established music composer of india, Mr.A.R.Rahman has scored the music for this film , where he proudly announces his reason behind accepting this movie is purely because of the scope of bringing the magic of tamil Folk music and Carnatic music is largely present with this script. Hence this movie will be a treat for all the music lovers in his unique style.
The cinematography for this movie has been done by one of the India’s most-wanted cinematographer Mr.Nirav shah, who has own some of the great works under his title such as Billa, Pokiri, Madrasa pattinam, Vaettai, Thaandavam in tamil, including some hindi movies such as Dhoom, Wanted, Varanasi .
The back bone of the movie, which is considered as the art direction has been designed by the art director Mr. T.Santhanam, who has earlier given us such an astonishing sets in Aayirathil oruvan, theiva thirumagal, pudhupaettai, yaaradi nee mohini etc.
The dialogue part of this movie has been penned by the veteran tamil Litreture writer Mr.Jeyamohan, who earlier has credited as a dialogue writer for the films like angadi theru, neerparavai, naan kadavul, kadal.
The national award winning editors k.L.Praveen has done the editing for this film.
The songs lyric was written by Kaviyakavignar Mr.Vaali, Pa.Vijay and Na.Muthukumar.
Also, the last song of our past ace lyricist Mr.vaali, was penned for our movie kaviya thalaivan, which is considered as an unforgettable moment in our tamil cinema.
The choreography for this movie has been done by our well-known choreographers such as our ace choreographer Mr.Raghuram , Mr. shivashankar, Mr.Raju sundaram and Mr.Chinni prakash.

The stunt choreography was done by the well-known stunt-director Mr.Thyagarajan master.

To be mentioned the costume designing has been done by Miss.Niranjani Ahathian and Mr.Perumal selvam and the make-up part was done by the national award winning make-up artist from Malayalam industry Mr. Pattanam Rashith.

Mr.Sundarraj is the Line-producer of this film, Mr.Nikil murugan is the PRO of this film, Mr.Muthuramalingam is the incharge of Production supervising and the production managing was look after by Mr.Sundar , Mr.R.S.Raja has done the still photography for the film,
The movie production is done under Mr.Sasikanth’s, “Y Not Studios “ banner. Where after the commercial success of “Tamil padam”, “ Vaa ”and “kadhalil sothapuvadhu eppadi”, Kaviya thalaivan is expected to be the grandeur production venture under their banner.
This movie has been shot in various locations such as in karaikudi, Thenkasi, Varanasi and Chennai, Which will be a visual treat for the audiences.
The final stage of shooting is still in progress; hence this movie is expected to be released in May 2014.

KAVIYA THALAIVAN
1. Kaviya thalaivan is the first movie in which director Vasantha balan and music director A.R.Rahman has committed to work together.
2. In this venture director vasantha balan has come up with a powerpacked combo of biggest artists like Siddharth , Prithviraj, Vedhika, Nasser, Thambi ramaiyah, mansoor ali khan, singam puli, ponvannan and few others.
3. After a long time interval Isai puyal A.R.Rahman has joined hands with a younger generation film-maker through this movie.
4. As for as the movie is considered to be portrayal of the lives of theatre artists, make-up plays a vital role in this whole script. Hence, our south-india’s best make-up artist Mr.Pattanam rasheed was made to work as a make-up designer for this movie.
5. The research work for this script has been carried away for nearly a year and lots of facts, references and whereabouts have been collected from the veteran theatre artists belonging to different theatre clubs existing in Madurai, dindugul, karur and pudhukottai etc.
6. This is the first movie in which the actor Siddharth and actor prithviraj both sharing the same screen space.
7. Following her remarkable acting in Paradesi, kaviya thalaivan will be a much bigger comeback for Vedhika in a female lead role.
8. After working in Madrasapattinam, this movie is the second period film for the india’s most wanted cinematographer Mr.Nirav shah.
9. The heroin of Ramgopal varmas “Satya 2” , Miss.Anaika sodi has been introduced to tamil industry as an another heroin in Kaviya thalaivan.
10. As the movie resembles the lives of theatre artists, there are lots of original theatre artists have been involved to work in this movie.
11. The Last song penned by kavignar Vaali before he passed away was the song called “Krishna Vijayam”, which is for this movie Kaviya thalaivan.
12. Also the late choreographer Mr.Raghuram master has composed choreography for two of the songs in this movie.
13. This movie will be released in Tamil, Telugu and Malayalam languages simultaneously.
14. Mr.Perumal selvam and Niranjani Agathiyan, Costume designers of Paradesi fame, has once again done an extra-ordinary work as the costume designers in providing the best costumes for the movie artists those resembling the theatre artist of pre-independence time.
15. Our Veteran tamil writer Mr.Jeyamohan has once again penned the dialogues for Vasanta balan’s movie after the success of Angadi theru.
16. The most remarkable thing to be mentioned in this movie is the combination of 7 national award winning personalities such as Director Vasanta balan, Isai puyal A.R.Rahman, Pa.Vijay, Thambi ramaiyah, Pattanam rasheed, Editor Praveen and costumer Selvam all has lined up for the first time in a same movie.

காவியத் தலைவன்
வெயில்,அங்காடித் தெரு,அரவான் வெற்றிப்படங்களைத் தொடர்ந்து இயக்குநர் வசந்தபாலனின் புதியபடம் காவியத்தலைவன்.
வசந்தபாலனின் வெயில் திரைப்படம் மூன்று ஃபிலிம்பேர் விருதுகளையும், சிறந்த பிராந்திய மொழி படத்திற்கான தேசிய விருதையும், சிறந்த படத்திற்கான தமிழக அரசின் விருதையும் பெற்ற படம். அப்படம் இந்தியன் பனோராமாவிற்கு தேர்வு செய்யப்பட்டதோடு, கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றது.
உலக அளவிலான பல்வேறு திரைப்பட விழாக்களில், சிறப்புப் பிரிவில் திரையிடப்பட்டது. உலக அளவிலான பல்வேறு குழந்தை நல அமைப்புகள் குழந்தைகளை எப்படி நடத்தக்கூடாது என்ற கருத்தை வெயில் திரைப்படம் அழுத்தமாக வலியுறுத்துகிறது என்று தங்களின் பிரச்சாரப்படமாக வைத்துள்ளது. வெயில் திரைப்படம் எஸ்ஆர்எம் திரைப்படக்கல்லூரியில் ஒரு திரைப்பட பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
அங்காடித்தெரு திரைப்படம் மூன்று ஃபிலிம் பேர் விருதுகளைப் பெற்றதோடு இந்தியன் பனோரமாவிற்கும் தேர்வு செய்யப்பட்டது. பாண்டிச்சேரியில் சிறந்த திரைப்படத்திற்கான அரசு விருது பெற்றது. ஆஸ்கார் விருதுக்கான இந்தியத் திரைப்படமாக கடைசி வரையிலும் தேர்வில் இருந்த படம்.
வெயில்,அங்காடித்தெரு,அரவான் படங்களை தொடர்ந்து வசந்தபாலன் இயக்கும் புதிய படம் காவியத்தலைவன்.
பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி தெலுங்கில் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக இருக்கும் சித்தார்த் கதாநாயனாக நடிக்கிறார். தமிழில், காதலில் சொதப்புவது எப்படி.உதயம்,தீயா வேலை செய்யனும் குமாரு,ஜிகர்தண்டா திரைப்படங்களைத்தொடர்ந்து சித்தார்த் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் காவியத்தலைவன்.

காளை,முனி,சக்கரக்கட்டி,பரதேசி திரைப்படங்களில் நடித்த வேதிகா கதாநாயகியாக நடிக்கிறார்.
இன்னொரு கதாநாயகியாக பிரபல இந்தி இயக்குனர் ராம்கோபால்வர்மாவின் சத்யா 2 திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அனைக்கா சோட்டி காவியத்தலைவன் திரைப்படத்தில் நடிக்கிறார்.
மிக முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள திரையுலகின் முன்னணி கதாநாயனாக இருக்கும் பிருத்விராஜ் நடிக்கிறார்.இவர் தமிழில் மொழி, கனா கண்டேன், ராவணன், பாரிஜாதம், நினைத்தாலே இனிக்கும், கண்ணாமூச்சி ஏனடா முதலிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
துணை,இணை கதாபாத்திரங்களில் நாசர்,தம்பி ராமைய்யா, சிங்கம்புலி, பொன்வண்ணன், மன்சூர் அலிகான், பாபு ஆண்டனி, கரிகாலன், குயிலி, இயக்குனர் டி.பி.கஜேந்திரன், கிஷோர், கொட்டாச்சி, அழகி ஜார்ஜ், மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னால், தமிழ்நாட்டில் பெரும் செல்வாக்கோடு வாழ்ந்த நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் சுதந்திரப் போராட்டமும் ஒரு முக்கியப் பகுதியாக வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக தமிழ் திரைப்படங்களுக்கும், பிற இயக்குனர்களுக்கும் அதிகம் இசையமைக்க ஒத்துக்கொள்ளாத, ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த திரைப்படத்தின் கதையைக் கேட்டு, இது நாட்டுப்புற இசைக்கும் கர்நாடக இசைக்கும் முக்கியத்துவமுள்ள படமாக இருக்குமென இசையமைக்க சம்மதித்ததோடு, தனித்துவமான இசையை வழங்கியுள்ளார்.

பில்லா, போக்கிரி, எங்கேயும் காதல், மதராசப் பட்டினம், தெய்வத்திருமகள், வேட்டை, தாண்டவம், தலைவா, இந்தி திரைப்படங்களான தூம் ,வாண்டட், வாரணாசி போன்ற திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், யாரடி நீ மோகினி ,தெய்வத்திருமகள் போன்ற திரைப்படங்களுக்கு கலை இயக்குநராக பணிபுரிந்த கலை இயக்குனர் சந்தானம் இப்படத்தில் கலை இயக்குநராக பணிபுரிகிறார்.
அங்காடித்தெரு, நான் கடவுள், நீர்ப்பறவை, கடல் போன்ற படங்களுக்கு வசனக்கர்த்தாவாக பணிபுரிந்த பிரபல இலக்கிய எழுத்தாளர் ஜெயமோகன் இப்படத்தின் உரையாடலை எழுதுகிறார்.
தேசியவிருது பெற்ற எடிட்டர் கே.எல் பிரவின் இப்படத்தின் படத்தொகுப்பை கவனிக்கின்றனர்.
படத்தின் பாடல்களை காவியக்கவிஞர் வாலி, பா.விஜய், நா.முத்துக்குமார் ஆகியோர் எழுதியுள்ளனர்.
மறைந்த கவிஞர் வாலி அவர்கள் எழுதிய கடைசிப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் காவியத்தலைவன் என்பது குறிப்பிடத்தக்கது
இப்படத்தின் நடன அமைப்பை பிரபல நடன இயக்குனர்களான ரகுராம், சிவசங்கர், ராஜீசுந்தரம், சின்னி பிரகாஷ் அமைத்துள்ளனர். சண்டை வடிவமைப்பை பிரபல சண்டைவடிவமைப்பாளர் தியாகராஜன் கவனிக்கிறார்.

நிரஞ்சனிஅகத்தியன், பெருமாள் செல்வம் ஆடை வடிவமைப்பை கவனிக்க, தேசிய விருது பெற்ற பிரபல மலையாள ஒப்பனை கலைஞர் “பட்டணம்” ரஷீத் ஒப்பனையை கவனிக்கிறார்.
இணை தயாரிப்பாளராக சுந்தர்ராஜூம், மக்கள் தொடர்பாளராக நிகில் முருகனும், தயாரிப்பு மேற்பார்வையாளராக முத்துராமலிங்கமும், தயாரிப்பு நிர்வாகத்தை சுந்தரும் கவனிக்கிறார்கள், புகைப்பட கலைஞர் R.S. ராஜா
’தமிழ்ப்படம்’, ’வ’, ’காதலில் சொதப்புவது எப்படி?’ படங்களைத் தொடர்ந்து ynot studios நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகாந்த் மிகுந்த பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார்.
காரைக்குடி, தென்காசி, வாரணாசி, சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடந்துவண்ணம் உள்ளது. மே மாதம் திரைக்குவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காவியத் தலைவன்
1. இயக்குநர் வசந்தபாலனும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் முதல் முறையாக இணையும் படம் காவியத் தலைவன்.
2. சித்தார்த் பிருத்விராஜ் நாசர் வேதிகா தம்பி ராமைய்யா சிங்கம்புலி மன்சூர் அலிகான் பொன்வண்னன் என மிகப்பெரிய நட்ச்சத்திரப் பட்டாளத்தோடு இயக்குநர் வசந்தபாலன் இப்படத்தில் களமிறங்கியுள்ளார்.
3. நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு இளந்தலைமுறை இயக்குநருடன் இசைப்புயல் இணைந்திருக்கும் படம் இது.
4. படம் முழுக்க நாடகம் தொடர்பான காட்சிகள் இருப்பதால் ஒப்பனையும் இப்படத்தில் மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. தென்னிந்தியாவின் மிகச் சிறந்த ஒப்பனைக் கலைஞரான பட்டணம் ரசீத் அவர்கள் இப்படத்தில் ஒப்பனைக் கலைஞராக பணி புரிந்துள்ளார்.
5. இப்படத்தின் கதை உருவாக்கத்திற்காக மதுரை புதுக்கோட்டை திண்டுக்கல் கரூர் என முக்கியமான நாடக சங்கங்களில் உள்ள மூத்தக் கலைஞர்களிடம் கலந்து ஆலோசித்து ஒரு வருடத்திற்கும் மேலாக கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
6. சித்தார்த்தும், பிருத்விராஜூம் முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் இது.
7. பரதேசியில் தன் நடிப்பின் மூலம் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த வேதிகாவிற்கு இந்தப்படம் பெரும் அடையாளம்.
8. தமிழ் தெலுங்கு இந்தி என பரபரப்பாக இயங்கும் நீரவ் ஷா மதராஸப்பட்டிணம் படத்திற்குப்பின் ஒளிப்பதிவு செய்யும் இரண்டாவது பீரியட் படம்.
9. பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் இந்திப்படமான சத்யா – 2 வின் கதாநாயகியான அனைக்கா சோட்டி இப்படத்தின் இன்னொரு கதாநாயகியாக தமிழில் முதல் முறையாக நடிக்கிறார்.
10. படம் நாடகக் கலைஞர்களின் வாழ்க்கை பற்றியதென்பதால் படம் முழுக்க நிறையன் நிஜ நாடகக் கலைஞர்கள் வேலை செய்துள்ளனர்.
11. கவிஞர் வாலி அவர்கள் கடைசியாக எழுதிய பாடலான ‘கிருஷ்ண விஜயம்’ பாடல் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது.
12. மறைந்த நடன இயக்குநர் ரகுராம் அவர்கள் இப்படத்தில் இரண்டு பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார்.
13. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் இந்தப்படம் வெளியாக உள்ளது.
14. பரதேசி படத்தில் சிறப்பாக உடைகள் கொடுத்த பெருமாள் செல்வமும், நிரஞ்சனி அகத்தியனும் இப்படத்திற்கான நாடக உடைகளை மிகச் சிறப்பாக உருவாக்கித் தந்துள்ளனர்.
15. அங்காடித் தெரு வெற்றிக்குப்பின் எழுத்தாளர் ஜெயமோகன், இயக்குநர் வசந்தபாலனின் காவியத்தலைவனிலும் வசனம் எழுதியுள்ளார்.
16. இயக்குநர் வசந்தபாலன், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், பா.விஜய், தம்பி ராமைய்யா, பட்டணம் ரஷீத், எடிட்டர் பிரவீன், காஸ்ட்யூமர் செல்வம் என ஏழு பேர் தேசிய விருது பெற்ற கலைஞர்கள் இப்படத்தில் பங்காற்றியுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *