Search

Kaththi Song Hearing Daily by Director Shankar

kathi

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ஐ’. இப்படத்தில் விக்ரம்-எமி ஜாக்சன் ஜோடியாக நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அதிக பொருட் செலவில் ஆஸ்கார் ரவிச்சந்திரன் பிரம்மாண்டமாக உருவாக்கியிருக்கிறார். படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு காத்திருக்கும் இப்படத்தை நவம்பர் மாதம் வெளியிடவுள்ளனர்.

ஷங்கர் பட வேலைகளில் பிசியாக இருந்தாலும் பாடல்களை கேட்கும் ஆர்வம் உடையவர். சமீபகாலமாக அவர் அடிக்கடி கேட்கும் பாடலாக கத்தி படத்தில் இடம் பெற்ற ‘பக்கம் வந்து…’ பாடலை கூறியிருக்கிறார்.

“கத்தி படத்தில் இடம்பெற்றுள்ள பக்கம் வந்து பாடல் சிறப்பாக உள்ளது. தினமும் இப்பாடலை கேட்கிறேன். மேலும் மெட்ராஸ் படத்தில் இடம்பெற்றுள்ள ‘நான் நீ…’ என்ற பாடலையும், ‘சென்னை வட சென்னை… என்ற பாடலையும் அதிகமாக கேட்கிறேன்” என்று ஷங்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

பக்கம் வந்து பாடலை மதன் கார்க்கி மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதியும் எழுதியுள்ளனர். அனிருத் மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதியும் பாடியுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *