Search

Jiah Khan secrets revealed by her Boy Friend

jiahkhan

தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட ஜியாகானின் ரகசியங்களை வெளியிட்டார் அவரது காதலன் சூரஜ் பஞ்சோலி. மும்பையில் உள்ள தனது குடியிருப்பில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார் பாலிவுட் நடிகை ஜியாகான். இது பாலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது தொடர்பாக ஜியாகான் காதலரும் நடிகருமான சூரஜ் பஞ்சோலி கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார். ஜியாகான் பற்றிய ரகசியங்களை தற்போது அவர் வெளியிட்டிருக்கிறார். இது குறித்து மும்பை ஆங்கில இதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியது: கடந்த 10 மாதத்துக்கு முன்பு பேஸ்புக் மூலம் ஜியாகானுடன் நட்பு ஏற்பட்டது. அவர் மிகவும் நல்லவர். சிறிய விஷயங்கள் அவருக்கு சந்தோஷம் தந்தது. அவரது நட்பை முதலில் எனது தந்தை ஏற்கவில்லை. பின்னர் ஏற்றுக்கொண்டார். அவரது குடும்பத்தாரிடம் ஜியாகானுக்கு இணக்கமான உறவு இல்லை. நான் நடிப்பு பயிற்சிக்கு சென்றபோது மற்ற பெண்களுடன் பழகுவதாக என் மீது ஜியாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. பிறகு என்னுடனே ஜியா பயிற்சி பள்ளிக்கு வந்தார். ஜியாகானுடன் உறவு கொண்டீர்களா என்று போலீசார் என்னை கேட்டபோது, ஆமாம் என்று பதில் அளித்தேன். ஆனால் அவர் கர்ப்பமாக இருப்பதாக என்னிடம் கூறவில்லை.

ஜியா இறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டோம். சினிமாவுலகில் வாய்ப்பு இல்லாததால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டதாக எனக்கு தகவல் வந்தது. இதுதொடர்பாக போலீசார் என்னை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். ஜியாவுடனான எனது உறவை மறைக்க விரும்பவில்லை. என் வாழ்நாள் முழுவதும் அவருடன் என்னை இணைத்து பேசினாலும் மறுக்க மாட்டேன். ஏனென்றால் இன்னும் அவரை காதலிக்கிறேன்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *