Search

Jayaram Joined Surya’s Masss Film

jayaram

சூர்யா தற்போது லிங்குசாமி இயக்கத்தில் ‘அஞ்சான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகிறது. இதையடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘மாஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா, எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்களுக்குமுன் தொடங்கியது. தொடர்ந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை காரைக்குடியிலும், அதைத் தொடர்ந்து வெளிநாடுகளிலும் படமாக்க உள்ளனர்.

இப்படத்தில் பார்த்திபன், பிரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் ஜெயராம் முக்கிய கதாபாத்திரத்தில் இணையவுள்ளார். இதற்கு முன் ஜெயராம், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘சரோஜா’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து இப்படத்திலும் நடிக்கவுள்ள ஜெயராமுக்கு இதில் வில்லன் கதாபாத்திரமா அல்லது வேறு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்று முடிவு செய்யவில்லை. மாஸ் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் இவர் இணைந்து நடிப்பார் என்று தெரிகிறது.

இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *