பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது.
வாக்களிப்பதன் அவசியம், கடமை குறித்து பொதுமக்கள் கூடும் இடங்களில் சென்னையில் பல்வேறு இந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அண்ணாநகர் டவர்பூங்காவில் இன்று நடந்த வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரத்தை நடிகர் ஜெயம்ரவி தொடங்கி வைத்தார். அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் வாக்குரிமை குறித்து எடுத்து கூறினார்.
பின்னர் நடிகர் ஜெயம்ரவி கூறியதாவது:–
பொது மக்கள் ஓட்டு போடுவது ஜனநாயக கடமை. இந்த சிறப்பு நிகழ்ச்சியில் நான் பங்கேற்று ஒரு துரும்பாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் நினைத்தால் யாரையும் தேர்ந்து எடுக்கலாம். நல்லவர்களை தேர்ந்து எடுக்க வேண்டும். அது உங்கள் கையில் தான் உள்ளது.
அதனால் கட்டாயம் வாக்களியுங்கள். ஓட்டு போடுவதை கஷ்டமாக நினைக்காமல் கடமையாக கருதி தவறாமல் வாக்களிக்க வேண்டும். இதை நான் ஹீரோவாக சொல்லவில்லை. ஓட்டு உரிமை இருக்கிறது என்ற அடிப்படையில் கூறுகிறேன்.
இவ்வாறு ஜெயம்ரவி கூறினார்.