Search

Iniya becomes Item Song Dancer

Iniya

வாகை சூடவா படத்தின் மூலமாக பிரபலம் அடைந்த இனியா, அதைத்தொடர்ந்து மவுனகுரு, அம்மாவின் கைப்பேசி படங்களில் நாயகியாக நடித்தார்.

நான் சிகப்பு மனிதன் படத்தில் வில்லியாக வந்தார். அதன் பிறகு படங்கள் இல்லை. ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆட அவரை அழைத்தனர். முதலில் மறுத்தார். இப்போது குத்தாட்டத்துக்கு சம்மதித்து உள்ளார்.

சி.எஸ். அமுதன் இயக்கும் ‘ரெண்டாவது படம்’ என்ற படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடி உள்ளார். ஆர்.பார்த்திபன் இயக்கிய ‘கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்’ படத்திலும் கண்ணன் இயக்கிய `ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்திலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடி உள்ளார்.

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் லட்சுமிமேனன் ஒரு பாடலை பாடி உள்ளார். அந்த பாடலுக்குதான் இனியா ஆடி உள்ளாராம். தொடர்ந்து பெரிய படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடப் போகிறாராம்.