Search

Iniya Allowed Flood Victims at Her Home For 3 Days

iniya

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு நயன்தாரா, ஹன்சிகா, சமந்தா, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பல நடிகைகள் உதவி செய்துள்ளனர். இனியாவும் தனது பங்குக்கு வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

மழை சேதத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியதையும் தெரிவித்துள்ளார். நிவாரண உதவிக்காக ஒருசில அமைப்புகள் உதவி பொருட்களை சேகரிப்பதை அறிந்தேன். நானும் அவர்களுடன் சேர்ந்து அந்த பணியில் ஈடுபட்டேன். இதன் மூலம் 14 டன் பொருட்களை சேகரிப்பட்டது. அந்த பொருட்களை தேவையான இடங்களுக்கு அனுப்புவதற்காக பொருட்களை பிரித்து பார்சல் செய்ய வேண்டியது இருந்தது. நானும் தொண்டர்களுடன் இணைந்து பார்சல் செய்யும் பணியில் ஈடுபட்டேன். 4 நாட்கள் இந்த வேலையை செய்தேன்.

இது மட்டுமல்ல, மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட போது, பாதிக்கப்பட்டவர்களை எனது சகோதரர் அழைத்து வந்து எங்கள் அடுக்கு மாடி குடியிருப்புகளில் தங்கவைத்தார். 3 நாட்கள் அவர்கள் தங்கி இருந்தனர். வெள்ளம் வடிந்த பிறகு அவர்கள் சொந்த இடங்களுக்கு சென்று விட்டனர்.

மழை பெய்த போது நான் துபாயில் இருந்ததால் நேரடியாக அவர்களுக்கு உதவ முடியவில்லை என்றாலும் என் சகோதாரர் என் சார்பில் இந்த உதவியை செய்தது நல்ல விஷயம். நிவாரண பொருட்களை சேகரிக்கவும், அனுப்பி வைக்கவும் நான் நேரடியாக உதவியது மனதுக்கு ஆறுதலாக உள்ளது.