Search

I want do movies like Chandramukhi – Tamanna

tamanna

நடிகை தமன்னா ஐதராபாத்தில் அளித்த பேட்டி விவரம் வருமாறு:–

கேள்வி:– அழகின் ரகசியம் என்ன?

பதில்:– உடற்பயிற்சி, நடனம், உணவு கட்டுப்பாடு.

கேள்வி:– விரும்பி சாப்பிடும் உணவு?

பதில்:– மீன் குழம்பு, ஐதராபாத் பிரியாணி விரும்பி சாப்பிடுவேன். பஞ்சாபி உணவு வகைகளும் பிடிக்கும்.

கேள்வி:– சினிமாவில் சிநேகிதிகள்.

பதில்:– நயன்தாரா, சமந்தா, காஜல் அகர்வால் மூவரும் நெருங்கிய தோழிகள்.

கேள்வி:– பலம், பலகீனம்?

பதில்:– அம்மா, அப்பா, அண்ணன் மூவரும் எனக்கு பலமாக உள்ளனர். பலகீனமும் அவர்கள்தான்.

கேள்வி:– அரசியலில் சேர்ந்து மக்கள் பிரதிநிதியானால் என்ன சட்டம் கொண்டு வருவீர்கள்.

பதில்:– பெண்களுக்கு நிறைய ‘டாய்லட்’ கட்டுவேன். தூய்மைக்கு சட்டங்கள் போடுவேன். தெருக்கள் சுத்தமாக இருக்கனும், சாலையில் குப்பைகளை போடுவோருக்கு கடும் தண்டனை அளிப்பேன்.

கேள்வி:– பிடித்த விஷயங்கள்?

பதில்:– நிறைய ஷாப்பிங் போறது பிடிக்கும். மேக்கப் போடவும் விரும்புவேன்.

கேள்வி:– உங்கள் கை பையில் இருப்பவை என்ன?

பதில்:– ஐபோன், சாமி படம், கேமரா.

கேள்வி:– ஓய்வை கழிப்பது எப்படி?

பதில்: கவிதை எழுதுவேன். புத்தகம் படிப்பேன். நிம்மதியாக தூங்குவேன்.

கேள்வி:– நடிக்க விரும்பும் கேரக்டர்?

பதில்:– கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள். சந்திரமுகி மாதிரி படங்களில் நடிக்கவும், ஐஸ்வர்யாராய் மாதிரி நடனம் ஆடவும் ஆசை.

கேள்வி:– பிடித்த உடைகள்?

பதில்:– புடவை, ஜீன்ஸ், லெதர் ஜாக்கெட்.

கேள்வி:– பிடித்த நடிகர்கள்?

பதில்:– மாதிரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா, ஹிருத்திக்ரோஷன்.

கேள்வி:– கடவுள் வரம் கொடுத்தால் என்ன கேட்பீர்கள்?

பதில்:– எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் குண்டாக கூடாது. அடுத்த ஜென்மத்தில் மாதிரி தீட்சித் மாதிரி பிறக்கனும், எப்போதும் குடும்பத்தினரோடு இருக்க வேண்டும்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *