Search

I m Fine Says Actress Sona

sona-hot-stills (2)

பிரபல கவர்ச்சி நடிகை சோனா. இவர் குசேலன், சிவப்பதிகாரம், பத்துக்கு பத்து, ஷாஜஹான், அழகர்மலை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார்.

சோனா விபத்தில் சிக்கியதாக திடீர் என்று தகவல் பரவியது. புதுச்சேரி அருகே காரில் அவர் சென்று கொண்டு இருந்தபோது விபத்து ஏற்பட்டதாகவும், இந்த விபத்தில் சோனா இறந்து போனதாகவும் இணையதளங்களில் தகவல் பரவியது.

டுவிட்டர், பேஸ்புக்கில் இந்த தகவல் வேகமாக பரவியது. இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது. சோனாவின் செல்போனில் பலர் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்கள். சிலர் அனுதாபம் தெரிவித்து சமூக வலைத்தளத்தில் கருத்துகள் பதிவு செய்தார்கள்.

இதுகுறித்து விசாரித்தபோது சோனா விபத்தில் சிக்கியதாக வந்த தகவல் வதந்தி என்றும் அவர் புதிய படம் ஒன்றில் நடித்துக்கொண்டு இருப்பதும் தெரிய வந்தது. சோனாவிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, வதந்தி பற்றி அவர் கூறியதாவது:-

‘‘நான் விருமாண்டியும் சிவனாண்டியும் என்ற படத்தில் மனோபாலா ஜோடியாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது. புதுச்சேரியில் தங்கி இருந்து இதில் நடித்துக்கொண்டு இருக்கிறேன்.

இந்த நிலையில், நான் கார் விபத்தில் சிக்கி இறந்து போனதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி இருக்கிறது. அதைப் பார்த்து நூற்றுக்கணக்கானோர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி என்னிடம் உடல் நலம் விசாரித்தார்கள். என் நலனில் அக்கறை உள்ளவர்கள் நிறைய பேர் இருப்பது அறிந்து மகிழ்ந்தேன்.

விபத்து எதுவும் நடக்கவில்லை. நான் நலமாக இருக்கிறேன். சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டி இருக்கிறது. அதுவரை எனக்கு எதுவும் நடக்காது. ரசிகர்கள் ஆதரவில் நன்றாகவே இருப்பேன்.’’

இவ்வாறு சோனா கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *