Search

I felt very tough to reduce my weight – Iniya

iniya

வெயிட் போடுவதைவிட குறைப்பதற்கு படாதபாடு பட வேண்டும் என்றார் இனியா. விக்ரம், சூர்யா உள்ளிட்ட ஹீரோக்கள், அனுஷ்கா, நயன்தாரா உள்ளிட்ட ஹீரோயின்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடல் எடையை குறைத்தோ அல்லது அதிகமாக்கியோ நடிக்கின்றனர். இப்படி செய்வதால் உடற்பயிற்சி, டயட் என கடுமையான வழிமுறைகளை கடைபிடிக்கின்றனர். இந்த அனுபவம் பற்றி இனியா கூறியதாவது: சிறுவயதிலிருந்தே நான் நடித்து வருகிறேன். பிறகு மாடலிங் செய்ததுடன், விளம்பர படங்களிலும் நடித்தேன். அழகி பட்டம் பெற்றிருக்கிறேன். நடிகையான பிறகும் மாடலிங் பெண்ணாக இருப்பது எனக்கு மிகவும் பிடித்தது. படங்களில் நடித்தபடி விளம்பர படங்களில் நடிப்பதையும் இடைவெளிவிட்டு கடைபிடிக்கிறேன். சினிமாவுக்கு வருவதற்கு முன் நிறைய குறும்படங்களில் நடித்திருக்கிறேன். இதுதான் படங்களில் எனக்கு நடிக்க உதவியாக இருந்தது. இப்போதுகூட குறும்பட இயக்குனர்களுடன் நான் தொடர்பில் இருக்கிறேன். வாகை சூட வா படத்திற்காக உடலில் வெயிட் போட்டேன். பிறகு அதை குறைக்க பட்டபாடு பெரும் கஷ்டம். புலிவால் படத்திற்காக டயட், உடற்பயிற்சி என்று கடுமையான வழிமுறைகளை கடைப்பிடித்து உடல் எடையில் சில கிலோக்கள் குறைத்தேன். இனிமேல் இந்த தோற்றத்தையே பராமரிக்க உள்ளேன்.