Search

Hotstar Specials உளவுத்துறை  திரில்லர், இணைய தொடர் “ஸ்பெஷல் ஆப்ஸ்”

  இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின்னுள்ளவர்களை தேடிய 19 வருட தேடுதல் வேட்டை, நீரஜ் பாண்டே உருவாக்கத்தில் இந்தியாவில்  19 வருடங்களில் உண்மையில்  நடந்த சம்பவங்களின் பின்னணியில் உருவாகியிருக்கும் இணைய தொடர்  !
Hotstar Specials வழங்கும் இந்த “ஸ்பெஷல் ஆப்ஸ்” ( Special Ops ) இணையத்தொடரை இயக்குநர் நீரஜ் பாண்டேவுடன் சிவம் நாயார் இணைந்து இயக்கியுள்ளார். மிக பிரபல நடிகர்களான கே கே மேனன், திவ்யா தத்தா, வினய் பதக், கரண் டக்கர், சஜ்ஜத் டெலஃபுரூஷ், சனா கான், சய்யாமிகெர், மெஹர் விஜ், விபுல் குப்தா, முசாமில் இப்ராஹிம், ஆகியோருடன் மேலும் பலர் நடித்துள்ளனர்.

மும்பை 25 பிப்ரவரி 2020 : 19 வருடங்கள், 12 நாடுகள், 6 உளவாளிகள், ஒரு அசகாய சூத்திரதாரி. Hotstar Specials நிறுவனம் Friday Storytellers – the digital arm of Friday Filmworks உடன் இணைந்து வழங்கும் 2020ன் இந்தியாவின் மிகப்பிரமாண்டமான உளவுவகை திரில்லர் இணைய தொடர் “ஸ்பெஷல் ஆப்ஸ்” ( Special Ops ). பரபரப்பு மிக்க 8 எபிஸோடுகள் கொண்ட இந்த இணைய தொடர் கடந்த 19 வருடங்களில் இந்தியாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு காரணமானவர்களை இந்திய உளவுத்துறை வேட்டையாடிதை மையமாக கொண்டது. உண்மையில் நடந்த பல சம்பவங்களின் பின்னணியில் இத்தொடர் கட்டமைக்கப்பட்டுள்ளது. 2001 ல் இந்திய பாரளுமன்றத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஆரம்பித்து அத்றகு முன் 26/11 காஷ்மீர் தாக்குதல் உட்பட பல உண்மை சம்பவங்களை கொண்டு இத்தொடர் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதல்களுக்கெல்லாம் பின்னுள்ள ஒரு அசகாய சூத்திரதாரியை தேடிய, இந்திய உளவுத்துறை வரலாற்றின் மிகப்பெரிய தேடுதல் வேட்டை தான் இந்தத்தொடர். Special ops பற்றிய தீவிர ஆய்வுகளை பல ஆண்டுகளாக மேற்கொண்டு, பல நுண்ணிய விவரங்களுடன் நீரஜ் பாண்டே , தீபக் கிங்ராணி, பெனாஷிர் அலி ஃபிடா ஆகியோர் இத்தொடரின் திரைக்கதையை எழுதியுள்ளனர். உலகின் பல முக்கியமான இடங்களில்  துருக்கி, ஆஜர்பெய்ஜான், ஜோர்டன் முதலான நகரங்கள் உட்பட பலவிதமான லொகேஷன்களில் இத்தொடர் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

Hotstar Specials வழங்கும் இந்த ஸ்பெஷல் ஆப்ஸ்” ( Special Ops ) இணையத்தொடரில் இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களான கே கே மேனன், திவ்யா தத்தா, வினய் பதக், கரண் டக்கர், சஜ்ஜத் டெலஃபுரூஷ், சனா கான், சய்யாமிகெர், மெஹர் விஜ், விபுல் குப்தா, பர்மித் சேதி, கௌதமி கவுர், முசாமில் இப்ராஹிம், ஆகியோருடன் மேலும் பலர் நடித்துள்ளனர்.

Hotstar Specials வழங்கும் இந்த “ஸ்பெஷல் ஆப்ஸ்” ( Special Ops ) இணையத்தொடர் 17 மார்ச் 2020 பல மொழிகளில் Hotstar VIP தளத்தில் வெளியாகிறது.

இத்தொடரின் வடிவமைப்பாளர் நீரஜ் பாண்டே கூறியதாவது…

“ஸ்பெஷல் ஆப்ஸ்” ( Special Ops ) இந்த கதை பற்றி பல ஆண்டுகளுக்கு முன்பாகவே யோசித்துகொண்டிருந்தேன். இது மிகப்பெரும் கதை, அதன் பின்னணி ஆதாரங்கள், தரவுகள், ஆராய்ச்சிகள் எல்லாம் மிகப்பெரும் பணியை கோரியது. இத்தனை பெரிய கதையை ஒற்றைப்படமாக கூறவியலாது. கதை கூறும் தளமே மாறிவிட்ட இந்த இணைய உலகு இப்போது இந்த கதையை கூற பெரும் ஆதரவாக அமைந்துள்ளது. இரண்டு தசாப்தங்கள் நீடிக்கும் இந்தக்கதையை பல உண்மைசம்பவங்களுடன் பரபரப்பு சிறிதும் குறையாத மிகபிரமாண்ட வடிவில் உருவாக்கியுள்ளோம்.  முதல் முறையாக 2001 பாராளுமன்ற தாக்குதல் இத்தொடர் மூலம் திரையில் வரவுள்ளது. ஆனால் அதைத்தாண்டி  எண்ணற்ற ஆச்சர்யங்கள் இத்தொடரில் கொட்டிக்கிடக்கிறது.

நடிகர் கே கே மேனன் கூறியதாவது…

Hotstar Specials வழங்கும் இந்த “ஸ்பெஷல் ஆப்ஸ்”  இந்திய உளவுத்துறையின் நேர்த்தியான வடிவத்தை திரையில் வழங்கியிருக்கிறது. உண்மையில்  முகம் மறைக்கப்பட்ட நிஜ ஹீரோக்கள் நம் உளவுத்துறை அதிகாரிகள் தான். இயல்பில் அவர்கள் நம்மை போல் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வருவார்கள். மக்கள்  கூட்டத்தில் இணைந்து, மக்களோடு மக்களாக இருப்பார்கள்   ஆனால் 24 மணிநேரமும் உளவாளியாகவே விழித்திருப்பார்கள். நாட்டுக்கு ஏறபடும் அச்சுறுத்தல்கள், ஆபத்துகளில் இருந்து நாட்டை காப்பார்கள். Hotstar Specials வழங்கும் இந்த “ஸ்பெஷல் ஆப்ஸ்” இந்த உன்னதமிக்க உளவாளிகளின் வாழ்வை அழகாக திரையில் வடித்துள்ளது. இந்திய தீவிரவாத தாக்குதலுக்கு பின்னிருக்கும் மறைக்கப்பட்ட காரணிகளை, ஒரு சூதிரதாரியின் வேட்டையை சொல்கிறது.

நடிகை திவ்யா தத்தா கூறியது…

Hotstar Specials வழங்கும் இந்த “ஸ்பெஷல் ஆப்ஸ்” இந்தியாவின் மிகப்பெரிய தீவிரவாத தேடுதல் வேட்டையை சொல்கிறது. இத்தொடரின் சிறப்பு என்னவெனில் சீட் நுனியில் வைத்திருக்கும் பரபரப்பு மிக்க கதை, அட்டகாச வடிவில், திரையில் இதுவரை இந்திய திரையுலகம் கண்டிராத வகையில் சொல்லப்பட்டுள்ளது. மிகப்பிரபல நடிகர்கள் பலர் பங்கு கொண்டிருந்தாலும் ஒவ்வொரு கதாப்பத்திரமும் தனித்தன்மை கொண்டதாகவும் கதையின் அழுத்தத்தை கூட்டும்படியும் அமைக்கப்பட்டிருக்கிறது. காலத்தின் பின் சென்று உண்மையில் நடந்த சம்பவங்களின் பின்னால் ரத்தமும் சதையுமாக உணர்வூர்வமாக கூறியிருப்பது இத்தொடரின் சிறப்பு

கதைச்சுருக்கம்

Hotstar Specials வழங்கும் இந்த “ஸ்பெஷல் ஆப்ஸ்” இந்திய உளவுத்துறையில் பணிபுரியும் ஹிம்மத் சிங் ரா அதிகாரியின் பயணத்திற்கு  நம்மை அழைத்து செல்லும். தன் பணியில் அவர் இந்திய தீவிரவாத தாக்குதல்களுக்கு பின்னுள்ள ஒப்புமையை கண்டறிகிறார். தாக்குதல்களின் கண்டறியப்பட்ட ஆதாரங்கள், தாக்குதல் நடத்தப்பட்ட விதத்தின் ஒற்றுமை ஆகியவற்றின் மூலம் இக்லாக் எனும் சூத்திரதாரியே இந்த அனைத்து தீவிரதாக்குதலுக்கும் பின்னுள்ளதாக கண்டுபிடிக்கிறார். அந்த சூத்திரதாரியை நெருங்கி கண்டறிய அதிதிறமை கொண்ட ஒரு குழுவை தேடுதல் வேட்டைக்காக கட்டமைக்கிறார்.
உலகின் பல பகுதிகளில் வாழும் ஃபரூக், ருஹாணி, ஜுஹி, பாலா மற்றும் அவினாஷ் ஆகியோரை இந்த தேடுதல் வேட்டை குழுவாக நியமிக்கிறார். இவர்கள் அந்த சூத்திரதாரியை வேடையாடுவதே இந்தக்கதை.

இந்திய உளவுத்துறை குழு அந்த சூத்திரதாரியை நெருங்கியதா ?  இங்கே டிரெய்லரில் காணுங்கள்  

Hotstar Specials வழங்கும் இந்த “ஸ்பெஷல் ஆப்ஸ்” ( Special Ops ) இணையத்தொடரை 17 மார்ச் 2020 பல மொழிகளில் Hotstar VIP தளத்தில் கண்டுகளியுங்கள்.

Hotstar  

Hotstar இந்தியர்களின் திரைஅனுபவத்தை மாற்றியமைத்த இந்தியாவின் மிகப்பிரமாண்டமான இணைய ஒளிபரப்பு தளம். Hotstar 100,000 மணி நேர இணைய தொடர், திரைப்படங்கள் ஆகியவற்றை 8 மொழிகளில் வழங்கி வருகிறது. மேலும் மாநில, தேசிய செய்திகள் மற்றும் உலகின் மிக முக்கிய விளையாட்டு பந்தயங்கள் ஆகியவற்றை ஒளிபரப்பி வருகிறது. 2015 ல் ஆரம்பிக்கப்பட்ட IPL தொடரை தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. Hotstar தொலைபேசி ஆப்பை 4 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தரவிறக்கம் செய்துள்ளார்கள். இதன் மூலம் Hotstar இந்தியாவின் மிகப்பெரும் இணைய ஒளிபரப்பு தளமாக விளங்கிவருகிறது. Hotstar ஆப் Google Playstore மற்றும் Apple App Store ஆகியவற்றில் தொடங்கப்பட்ட நாள் முதல் முன் வரிசையில் இடம்பிடித்து முன்னனி தளமாக விளங்கி வருகிறது. அனைத்து வித கருவிகளிலும் துல்லியமான, தெளிவான, நேர்த்தியான ஒளிபரப்பில் வெற்றிகரமான இணைய ஒளிபரப்பு தளமாக விளங்கி வருகிறது Hotstar.