கோலிவுட்டில் லட்சுமி மேனன், நஸ்ரியா என்று சில நடிகைகள் அதிரடியாக படங்களை கைப்பற்றி வந்தபோதும், இதுவரை ஹன்சிகாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கைவசம் ஒன்பது படங்களை வைத்திருக்கும் அவர், பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இருப்பினும் இப்படியே நிலைமை இருக்காது என்பதால், எதிர்கால நலனை கருத்தில் கொண்டு புதிய தெலுங்கு படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்து வருகிறார் ஹன்சிகா. அங்கு முன்னணியில் இருக்கும் சமந்தா, அஞ்சலி போன்ற நடிகைகளின் கவனம் தற்போது கோலிவுட் பக்கம் திரும்பியிருப்பதால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆந்திராவிலும் ஆழமாக காலுான்ற போகிறாராம் ஹன்சிகா.