Search

My film is not about Politics – Santhosh Sivan

santhosh-sivan

சினிமா ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான சந்தோஷ் சிவன், ‘இனம்’ என்ற தலைப்பில் இலங்கையை களமாகக் கொண்டு ஒரு திரைப்படத்தினை இயக்கி வருகிறார். தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் படம் தயாராகிறது.

கேரளா, இலங்கை ஆகிய இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 15 வயது சிறுவன் ஒருவன் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளான். இந்தத் திரைப்படம் இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அங்கு சிக்கிக் கொண்ட நான்கு சிறுவர்களைப் பற்றிய கதையாகும்.

2009-ம் ஆண்டில் அங்கு நடைபெற்ற யுத்தம் முடிவுக்கு வந்தபோதிலும், இன்னும் அது ஒரு உணர்ச்சிமயமான விஷயமாகவே மக்களால் கருதப்படுகின்றது. என்னுடைய திரைப்படம் இந்தப் போரினால் சிதைக்கப்பட்ட மனித மனங்களின் அபிலாஷைகளையும், உணர்வுகளையும் பற்றியதாகவே இருக்கும். அதன்பின்னால் உள்ள அரசியல் பற்றி இதில் குறிப்பிடவில்லை என்று கூறும் சந்தோஷ் சிவன், தான் கூடியவரை நடுநிலையான கண்ணோட்டத்துடனே படத்தை இயக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆங்கிலத்தில் ‘சிலோன்’ என்ற பெயரில் வெளிவர உள்ளது. இந்தத் திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகளின் அடிப்படை குறித்து இயக்குனர் பல மாதங்கள் உழைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *