Search

Fans Like my Smile Says Anushka

anushka

அனுஷ்கா ‘அருந்ததி’ படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி தற்போது முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது ‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாக நடிக்கிறார். அஜீத்துடன் புது படமொன்றில் ஜோடியாக நடிக்கிறார்.

தெலுங்கு, தமிழில் தயாராகும் ருத்ரமா தேவி, பாகுபலி ஆகிய இரு படங்களில் நடிக்கிறார். இவ்விரு படங்களும் வரலாற்று கதையம்சம் கொண்டவை. ருத்ரமா தேவியில் ராணி கேரக்டரில் வருகிறார். இந்த வேடத்தில் நடிப்பதற்காக வாள் சண்டை, குதிரையேற்றம் கற்றுள்ளார். இப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டுள்ளது.

சினிமாவில் உயர்ந்த இடத்தை பிடித்தது எப்படி என்று அனுஷ்காவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–

என் வெற்றி ரகசியம் எனது சிரிப்புதான். புன்னகையால்தான் வளர்ந்தேன். இத்தனை புகழும் எனது சிரிப்பால் மட்டுமே எனக்கு கிடைத்துள்ளது. சிரிப்பு என்பது உலக மொழி, எல்லோரும் சிரிப்பதை விரும்புவார்கள். எனக்கு எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்க பிடிக்கும்.

யாரையேனும் சந்திக்க நேர்ந்தால் அவர்களை பார்த்து சிரிப்பேன். அது எங்களுக்குள் நெருக்கமான நட்பை ஏற்படுத்தி விடுகிறது. ரசிகர்களுக்கும் எனது சிரிப்பு பிடிக்கிறது. எனது எல்லா வெற்றிக்கும் என் சிரிப்புதான் காரணமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *