Search

England Visa Rejected for Salman Khan

salmankhan

கார் விபத்து வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதால் நடிகர் சல்மான்கானுக்கு இங்கிலாந்து விசா வழங்க மறுத்து விட்டது. நடிகர் சல்மான்கான் ‘கிக்’ என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு இங்கிலாந்து நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக படப்பிடிப்பு குழுவினர் லண்டன் சென்று தங்கியுள்ளனர்.

நடிகர் சல்மான்கான் இங்கிலாந்து செல்வதற்காக மும்பையில் உள்ள அந் நாட்டு தூதரகத்தில் விசா கேட்டு விண்ணப்பம் செய்து இருந்தார். ஆனால் அவருக்கு விசா வழங்க இங்கிலாந்து அரசு மறுத்து விட்டது. இதனால் சல்மான்கான் இங்கிலாந்து செல்ல முடிய வில்லை. நடிகர் சல்மான்கான் மீது மான் வேட்டையாடிய வழக்கும், போதையில் அதிவேகமாக கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கும் நிலுவையில் உள்ளது.

கார் விபத்து வழக்கில் சமீபத்தில் தான் கோர்ட்டில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதனால் அவருக்கு விசா மறுக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. விசா மறுப்புக்கான காரணம் பற்றி இங்கிலாந்து அரசு எதுவும் குறிப்பிடவில்லை. இதற்கிடையே சல்மான்கானுக்கு விசா கேட்டு மீண்டும் இங்கிலாந்து அரசிடம் விண்ணப்பம் செய்ய ‘கிக்’ படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளார். சல்மான்கான் லண்டன் செல்ல முடியாததால் ‘கிக்’ படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு குழுவினர் லண்டனில் தங்கியுள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *