Search

Dr. P.N.Prabakaran speaks about Diabetes

‘ஜெயா ப்ளஸ்’ தொலைக் காட்சியில் நிகழ்ச்சி நடத்தும்
மனநல நிபுணர் டாக்டர் பி.என். பிரபாகரனின்
‘சர்க்கரை நோயாளியா?
நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி!’

ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் மிக அருமையான நிகழ்ச்சி ‘உன் விதி உன் கையில்’. பிரபல மனநல நிபுணரும். ஹிப்னாட்டிக் வல்லுனருமான டாக்டர் பி.என்.பிரபாகரன் இந்த நிகழ்ச்சியில் மனம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், கணவன் – மனைவி பிரச்னைகள், மாணவர்களின் பிரச்னைகள், போதை பொருட்களுக்கு அடிமை ஆவோரின் பிரச்னைகள், காதல் பிரச்னைகள் என்று பலவகையான பிரச்னைகளைப் பற்றி ஆழமாக அலசி, அதற்கு தீர்வு கூறுகிறார். மருந்தோ, ஊசியோ, மாத்திரைகளோ இல்லாமல் ‘ஹிப்னாசிஸ்’ மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும்படி அவர் செய்கிறார்.

இதன்மூலம் ஆயிரக்கணக்கான நபர்கள் பயன்பெற்றிருக்கின்றனர். இது தவிர, டாக்டர் பிரபாகரன் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மக்களுக்கு முன்னால் சொற்பொழிவுகளும் நடத்தி இருக்கிறார்.

இம்மாதம் 14ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு டாக்டர் பிரபாகரன்

‘சர்க்கரை நோயாளியா?
நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி!’

என்ற பரபரப்பான தலைப்பில் சென்னை, தியாகராய நகரில் உள்ள
சர். பிட்டி. தியாகராயர் ஹாலில் சொற்பொழிவு ஆற்ற இருக்கிறார். இரண்டு மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெறலாம். சர்க்கரை நோய் இல்லாதவர்கள், நிகழ்ச்சியைப் பார்த்து சர்க்கரை நோய் வராமல் பார்த்துக் கொள்ளலாம்.

மிகவும் பயனுள்ள இந்த நிகழ்ச்சிக்கான அனுமதிச் சீட்டுகள் தேவைப்படுவோர் 9842433924, 9840097530 என்ற அலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

டிக்கெட் கட்டணம்: ரூ.1000, 500, 200




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *