Search

I Dont Worry About Ranjith 2nd Marriage Says Priya Raman

priyaraman

நடிகர் ரஞ்சித் இரண்டாவது திருமணம் செய்வது பற்றி எனக்கு கவலை இல்லை என்று பிரியாராமன் கூறினார். சூர்யவம்சம், வள்ளி, சின்னராஜா உள்ளிட்ட பல படங்களில் பிரியாராமன் நடித்துள்ளார். ரஞ்சித்துடன் நேசம்புதுசு என்ற படத்தில் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த வருடம் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். விவாகரத்தும் செய்து கொண்டனர். தற்போது நடிகை ராகசுதாவை 2–வது திருமணம் செய்து கொள்ளப்போவதாக ரஞ்சித் அறிவித்து உள்ளார். இதுகுறித்து பிரியாராமனிடம் கேட்ட போது அதுபற்றி எனக்கு கவலை இல்லை என்றார். மேலும் அவர் கூறியதாவது:–

எனக்கு தன்னம்பிக்கை நிறைய இருக்கிறது. சொந்த காலில் என்னால் நிற்க முடியும். ஆண் துணை எனக்கு தேவை இல்லை. இன்னொரு திருமணம் செய்து கொள்ள மாட்டேன். எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களுடன் யார் தயவுமின்றி வாழ்ந்து காட்டுவேன். யாரும் யாரையும் திருமணம் செய்து கொள்ளட்டும். அது அவர்களுடைய விருப்பம். நான் பகவான் கிருஷ்ணரின் பக்தை. அவர் வழி காட்டுதல்படி நடப்பேன். எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கும்.

இவ்வாறு பிரியாராமன் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *