Search

Director Vijay learned Scuba Diving with the help of Amalapaul

amalapaul-vijay

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட விஜய்-அமலாபால் தங்களின் தேனிலவை மாலத்தீவுகளில் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளனர். அமலாபாலை தனது தேனிலவு குறித்த சுவையான விஷயங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர் கூறும்போது,

திருமணம் என்பது ஒரு பெண்ணை முழுமையாக்குகிறது. திருமணத்திற்குப் பிறகே ஒரு பெண்ணுக்குள் ஒளிந்திருக்கும் திறமைகள் வெளிவருகின்றன. சாதனை விளையாட்டுக்கள் என்பது எனக்கு பிடிக்கும். அதற்காகவே தேனிலவுக்கு மாலத்தீவுகளை தேர்ந்தெடுத்தோம். இத்தகைய விளையாட்டுக்களுக்கு அங்கு வாய்ப்பு அதிகம்.

அங்கு நடைபெற்ற ஸ்கூபா நீச்சலில் நானும், விஜய்யும் பங்கேற்றோம். அப்போது நான் விஜய்க்கு ஸ்கூபா டைவிங் கற்றுக் கொடுத்தேன். அதற்கு விஜய், இதுவரை எனக்கு ஸ்கூபா டைவிங் யாரும் கற்றுக் கொடுத்ததில்லை. இந்தமுறை உன்னால்தான் இதில் கலந்துகொண்டேன் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து பல சாதனை விளையாட்டுக்களில் நாங்கள் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளோம்.

திருமணக் கொண்டாட்டங்களை முடித்துள்ள அமலாபால் விரைவில் பெண்ணை மையப்படுத்தி ராஜேஷ் பிள்ளை இயக்கும் ‘மிலி’ படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *