Search

Director Perarasu New Flick is Thigar

perarasu-thigar-1

பேரரசு இயக்கத்தில்

“திகார்”

திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி, பழனி, திருவண்ணாமலை, போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பேரரசு, அடுத்ததாக நவீன தொழில்நுட்பத்துடன் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இயக்கும் படத்திற்கு “திகார்” என்று பெயரிட்டுள்ளார்.

காட்சன் பிலிம்ஸ் பட நிறுவனம் மிகப் பிரம்மாண்டமான முறையில் இந்த படத்தைத் தயாரிக்கிறார்கள்.

கதாநாயகனாக முகுந்தன் என்பவர் அறிமுகமாகிறார். கதாநயாகியாக மும்பை மாடல் அழகி அகன்ஷா பூரி அறிமுகமாகிறார்.

மற்றும் ரியாஸ்கான், எம்.எஸ். பாஸ்கர், பெரோஸ்கான், நியாமத்கான், மும்பை வில்லன் கே.சி. சங்கர், இன்னொரு நாயகனாக கார்த்திகேயன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – சேகர் வி. ஜோசப். இவர் சந்திரமுகி, சிவகாசி போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.

இசை – ஷபீர்

கலை – வல்சன்

நடனம் – ஹரி

ஸ்டன்ட் – தீப்பொறி நித்யா

எடிட்டிங் – ஷம்ஜத்

தயாரிப்பு – காட்சன் பிலிம்ஸ்

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – பேரரசு

படம் பற்றி இயக்குனர் பேரரசுவிடம் கேட்டோம்.

“ஒரு காலத்தில் இந்த நாட்டையே கலக்கிக் கொண்டிருந்த மிகப் பெரிய தாதா அலெக்ஸண்டரின் மறைவுக்குப் பிறகு அவரது மகன் ஜோர்தன், இன்றைய சூழலில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் “திகார்”.

ஆக்ஷன் படம் என்றால் சாதாரணம். இது அதிரடி ஆக்ஷன் படம். இதற்காக பிலிம் சிட்டியில் 25 லட்ச ரூபாய் செலவில் மிகப் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு முகுந்தன் – ரியாஸ்கான் மோதும் பாக்சிங் சண்டைக்காட்சி படமானது.

படப்பிடிப்பு துபாய், மும்பை, ஹைதராபாத், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

வழக்கமான என் பாணி படம் இல்லை ‘திகார்’. பரபரப்பான ஆக்ஷன் படம்,” என்கிறார் பேரரசு.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *