Search

Director left the shooting at halfway

ravikumar

தமிழ்த் திரைப்படத்துறையைச் சேர்ந்த இயக்குனர் தயாரிப்பாளரான பி.ரவிக்குமார் மீது சமீபத்தில்தான் நடிகை சுஜிபாலா மரண அச்சுறுத்தல் புகார் ஒன்றினை அளித்திருந்தார். இப்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் ரவிக்குமார் சிக்கியுள்ளார். அவரது சொந்தத் தயாரிப்பான ‘லவ் பண்ணலாமா வேணாமா’ படப்பிடிப்பிற்காக இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கொண்ட குழுவினை மும்பை அழைத்துச் சென்ற இவர் அவர்களைத் திண்டாட விட்டுவிட்டு பாதியில் திரும்பி வந்துவிட்டதாக அவர் மீது புகார் ஒன்று எழுந்துள்ளது.

கடந்த புதன்கிழமை அன்று படப்பிடிப்பு குழுவினர் தங்கியிருந்த மும்பை ஹோட்டல் நிர்வாகத்தினர் தங்களுக்கு பெருந்தொகை பாக்கியிருப்பதால் அதன் ஒரு பகுதியை செலுத்துமாறு ரவிக்குமாரிடம் கூறியுள்ளனர். அதற்கு பதில் எதுவும் அளிக்காத ரவிக்குமார் மறுநாள் யாரிடமும் சொல்லாமல் ஹோட்டலை விட்டு வெளியேறியுள்ளார். விபரம் அறிந்து செய்வதறியாது படப்பிடிப்புக் குழுவினர் தவிக்க அவர்களுக்கான அனைத்து சேவைகளையும் ஹோட்டல் நிர்வாகத்தினர் நிறுத்தினர். அவர்கள் தங்குவதற்கு மட்டும் ஊழியர்களுக்கான அறையை ஒதுக்கியுள்ளனர். கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு இவர்கள் அனைவரும் டீ, தண்ணீர், பிஸ்கெட் என்றே பொழுதைக் கழித்துள்ளனர்.

இதுகுறித்து பத்திரிகைத்தரப்பு ரவிக்குமாரைத் தொடர்புகொண்டபோது படப்பிடிப்புக் குழுவினர் மும்பை ஷூட்டிங்கில் இருப்பதாகவும், தேர்தல் சமயத்தினால் தன்னால் ஹோட்டல் பாக்கியை அளிக்கமுடியவில்லை என்றும் தெரிவித்தார். இந்தத் தகவல் அச்சுக்குப் போகும் நேரத்தில் ரவிக்குமார் ஹோட்டல் தொகையை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளார் என்று நிர்வாகத் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *