ஹரி இயக்கத்தில் விஷால்-சுருதிஹாசன் நடித்து தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் படம் ‘பூஜை’. இப்படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக இயக்குனர் ஹரி கூறியுள்ளார். ஹரி இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, ‘பூஜை’ படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறேன். அவரிடம் 2 கதைகள் சொல்லியிருக்கிறேன். அதில் அவர் எதை தேர்வு செய்வார் என்று தெரியவில்லை. இப்படம் ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகமாக இருக்குமா? என்பதை இப்போது சொல்லமுடியாது என்றார்.
ஏற்கெனவே சூர்யா-ஹரி கூட்டணியில் ‘சிங்கம்’, ‘சிங்கம்-2’ ஆகிய படங்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டானது. இதனால் ‘சிங்கம்’ படத்தின் 3-ம் பாகத்தை எடுப்பார்களா? என்று எதிர்பார்த்திருந்த நிலையில், விஷாலை வைத்து ‘பூஜை’ படத்தை இயக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில், இப்படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைய முடிவு செய்திருக்கும் ஹரி, இந்த படத்தை ‘சிங்கம்’ படத்தின் 3-ம் பாகமாக எடுப்பாரா? என்பது பின்புதான் தெரியவரும்.
ஏற்கெனவே ஹரி தான் ஒரு டான் கதையை உருவாக்கி வைத்திருப்பதாகவும், அந்த கதையில் நடிக்க அஜீத்தான் பொருத்தமாக இருப்பார் என கூறியிருந்தார். அஜீத் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருவதால் அவரால் இந்த கதையில் நடிக்க முடியாமல் போனது என்றும் கூறியிருந்தார்.
ஹரியின் இந்த கனவு இன்னமும் நனவாகாமல் இருக்கிறது. அப்படியொரு நாள் அந்த கனவு நனவானால் நிச்சயம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என்பது மட்டும் உண்மை