Search

Director Bala Accepted to give chances for Jayam Ravi and Shaam

bala

‘சலீம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. விஜய் ஆண்டனி, ஷாம், பாலா, ‘ஜெயம்’ ராஜா மற்றும் பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.

அப்போது ‘ஜெயம்’ ராஜா பேசும் போது, “என் தம்பி ‘ஜெயம்’ ரவிக்கு உங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு தரவேண்டும்” என்று பாலாவிடம் வாய்ப்பு கேட்டார். அதே போல் ஷாம் பேசும் போது, பாலா படத்தில் நடிப்பது என் பெருங்கனவு என்று சொல்லி, கனவையும் விளக்கினார்.

இதைக் கேட்ட பாலா, கண்டிப்பாக இருவரும் என் படத்தில் நடிப்பார்கள் என உறுதியளித்தார். ஷாம் நடிப்பில் வெளியான ஆறு மெழுகுவர்த்திகள் படத்தில் பெரும் சிரமம் எடுத்து நடித்த ஷாமை நான் பாராட்டுகிறேன். பெரும் சிரமத்திற்காக நான் ஷாமுக்கு வாய்ப்பு தருகிறேன்.

‘ஜெயம்’ ரவி நடிப்பதற்காக கால்ஷீட் விஷயங்களை அவர் அப்பாவிடம் பேசுகிறேன் என்றும் பாலா கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *