Search

Dhanush Special Apperance in Madhavan Film ?

dhanush-madhavan

கோலிவுட் நடிகரான தனுஷ் ‘ராஞ்சனா’ படம் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்தார். இவர் பாலிவுட்டுக்கு போக முக்கிய காரணமாக அமைந்தது இவர் பாடிய ‘கொலவெறி’ பாடல்தான். இந்த பாடல் உலகமெங்கும் பிரபலமாக இந்தி இயக்குனர் ஆனந்த் எல்.ராய், தன்னுடைய படமான ‘ராஞ்சனா’வில் தனுஷை நடிக்க வைத்தார். இப்படம் தனுஷுக்கு இந்தியில் ஒரு நிலையான இடத்தை பெற்றுக் கொடுத்தது.

இந்நிலையில், ஆனந்த் எல்.ராய் தற்போது மாதவன்-கங்கனா ரணாவத்தை வைத்து தாணு வெட்ஸ் பாணு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இப்படம் முதல் பாகம் பெரும் வெற்றியடைந்ததையடுத்து தற்போது இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் தனுஷ் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தனுஷ் ஒரு பாடல் அல்லது ஒரு சில காட்சிகளில் நடிப்பார் என்றும் தெரிகிறது.

தனுஷ் தற்போது இந்தியில் பால்கி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தமிழில் இவர் நடித்துள்ள ‘வேலையில்லா பட்டதாரி’ படம் இம்மாத இறுதியில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *