Search

Dhansika refused to act with Arulnithi

dhansika

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ‘பேராண்மை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தன்ஷிகா. வசந்த பாலனின் ‘அரவான்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகையாக அறியப்பட்டார். இதையடுத்து பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘பரதேசி’ படத்தில் இருநாயகிகளில் ஒருவராக நடித்தார். தற்போது ‘யா யா’ படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிம்பு தேவன் இயக்கும் ‘கன்னியும் மூன்று களவாணிகளும்’ படத்தில் நடிக்க தன்ஷிகாவை கேட்டுள்ளனர். இவரை ஒப்பந்தம் செய்ய வந்தவர்களிடம் தன்ஷிகா ‘ஜனநாதன், வசந்தபாலன், பாலா ஆகிய பெரிய இயக்குனர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ள நான், அருள்நிதி போன்ற வளரும் நடிகர்களுடன் நடிக்க முடியாது’ என்று கறாராக கூறிவிட்டாராம். அவர் நடிக்க மறுத்த வேடத்தில் தற்போது பிந்து மாதவியை ஒப்பந்தம் செய்து நடிக்க வைத்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *