Search

Deepika Padukone cried at Shooting Spot

deepika-padukone

சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் வெற்றியில் திளைத்துப் போயிருக்கும் தீபிகா படுகோனே, அடுத்து, ரன்வீர் சிங் ஜோடியாக, ராம்லீலா என்ற படத்தில் நடிக்கிறார். பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஒருநாள் திடீரென்று குமுறி, குமுறி அழுதுக் கொண்டிருந்தாராம் தீபிகா.படத்தின் கதாநாயகி அழுவதால், படப்பிடிப்பு யூனிட்டே அதிர்ந்து போனதாம். உடனே, சிலர் அவரை நெருங்கி, இந்த அளவுக்கு அழுவதற்கு என்ன காரணம்? என்று, அவரை விசாரித்தனராம். அப்போது, “சினிமாவில் நான் நடிக்க வந்து எத்தனையோ ஆண்டுகளாகி விட்டன. ஆனால், இதுவரை ஒரு டைரக்டர் கூட, என் நடிப்பை மனதார பாராட்டியதில்லை. முதன் முறையாக சஞ்சய்லீலா பன்சாலி தான், உன் நடிப்பு அபாரம். இந்தப் படத்தில், உன் நடிப்பு தான் அதிகமாக பேசப்படும என்றார். அந்த சந்தோஷத்தில் தான் என்னையுமறியாமல் அழுதுவிட்டேன்” என்று அதிர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *