விஜய் ஜோடியாக நடிக்க ஒரு நாளைக்கு ரூ.1 கோடி சம்பளம் வேண்டும் என்று தீபிகா படுகோனே நிபந்தனை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார்.
‘கோச்சடையான்’ படத்தில் ரஜினி ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் இரண்டு நாட்கள் நடிக்க ரூ.3 கோடி சம்பளம் வாங்கியதாக செய்திகள் பரவியுள்ளன.
விஜய்யை வைத்து சிம்புதேவன் இயக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோனேவை அணுகினர். அப்படத்தில் நடிக்க அவர் சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்து அவர் கேட்ட சம்பளம் படக்குழுவினரை ஆட்டம் காண வைத்ததாம். தனக்கு ஒரு நாள் சம்பளமாக ரூ.1 கோடி வேண்டும். எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் சூட்டிங் வைத்துக் கொள்ளுங்கள் என்றாராம்.
தீபிகா படுகோனே இவ்வளவு தொகை கேட்பார் என படக்குழுவினர் எதிர்பார்க்கவில்லை. யோசித்து சொல்வதாக கூறிவிட்டு சென்று விட்டனர். தீபிகா படுகோனே கேட்ட தொகையை கொடுத்தால் அவரது முழு சம்பளமும் விஜய் சம்பளத்தை தாண்டி விடும் என்கின்றனர்.
சம்பளத்தை கொஞ்சம் குறைத்துக்கொள்ளும்படி பேசி வருகிறார்களாம். இதற்கு சம்மதம் தெரிவித்தால் விரைவில் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனர்.