விடுநர்
வ.செல்வகுமார், ஆண் / வயது: 43
சமுக ஆர்வலர்,
த/பெ. சி.வாசுதேவன்(காலம் சென்ற)
15, திருவீதி அம்மன் கோயில் தெரு,
அமைந்தகரை,
சென்னை – 600 029
கைபேசி என்: 7299913999
பெறுநர்
ஆசிரியர் / உதவி ஆசிரியர் / நிருபர்கள்,
அனைத்து ஊடகங்கள்,
ஐயா,
பொருள்: டிசம்பர் 29, 2017 அன்று வெளியாகும் ‘சங்குசக்கரம்’ திரைப்படத்தில் நடித்துள்ள குழந்தைகள் சித்திரவதை செயப்பட்டுள்ளனர்.
வ.செல்வகுமார் ஆகிய நான் மேலே குறிப்பிட்டுள்ள விலாசத்தில் வசித்து வருகிறேன். நான் ஒரு சமுக ஆர்வலர். சமீபத்தில் நடந்த “சங்குசக்கரம்” திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு வீடியோவை பார்த்தேன். அதில் பேசிய அப்படத்தில் நடித்த ஒரு குழந்தை நட்சத்திரம் தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும், தனக்கு காண்டாக்ட் லென்ஸ் பொருத்தியதாகவும் குறிப்பிட்டிருந்தார். அது மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பேசும்போது, அந்த பேயாக நடித்த அந்த குழந்தை நட்சத்திரத்தை கயிற்றில் கட்டி தொங்க விட்டதாக தெரிவித்துள்ளார்.
படத்திலோ நடித்த குழந்தை நட்சத்திரமும், படத்தின் இயக்குனரும் சொல்வதை பார்த்தல் அதில் நடித்துள்ள குழந்தைகள் கண்டிப்பாக துன்பப்பட்டு இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லாமல் நிருபணமாகிறது.
எனவே இந்த படத்தில் அப்படி குழந்தைகள் உண்மையில் துன்புற்றப்பட்டிருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு படத்தினை வெளியிடாமல் தடை செய்யச்சொல்லி சென்னை காவல்துறை ஆணையர் அவர்களுக்கு புகார் அளித்துள்ளேன்.
நன்றி,
தங்கள் உண்மையுள்ள,
வ.செல்வகுமார்.