Search

Censorboard not agreed to give U for Biriyani Film

biriyani

கார்த்தியின் ‘பிரியாணி’ படத்தை வருகிற 20–ந்தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதில் கார்த்தி ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். பிரேம்ஜியும் முக்கிய கேரக்டரில் வருகிறார். வெங்கட்பிரபு இயக்கியுள்ளார்.

தணிக்கை குழுவினர் இந்த படத்தை பார்த்து வயது வந்தோர் மட்டுமே பார்க்கும் சில காட்சிகள் இருப்பதாக சுட்டிக் காட்டினர். எனவே படத்துக்கு ‘யு’ சான்றிதழ் தர இயலாது என்று கூறி ‘யுஏ’ சான்றிதழ் அளித்தனர். இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியானார்கள்.

‘யு’ சான்றிதழ் பெற்றால் மட்டுமே தமிழக அரசின் கேளிக்கை வரியில் இருந்து விலக்கு பெறமுடியும். விஜய்யின் ‘தலைவா’, விஷாலின் ‘பாண்டிய நாடு’ படங்களுக்கும் இதுபோல் ‘யு’ சான்று மறுக்கப்பட்டு மேல் முறையீட்டு குழுவுக்கு அனுப்பப்பட்டது.

அதுபோல் ‘பிரியாணி’ படத்துக்கும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ‘யு’ சான்று பெற படத்தை மேல் முறையீட்டு குழுவுக்கு அனுப்ப தயாரிப்பு தரப்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *