Search

I Cant Able to Finish 2 Rounds at Boxing – Jayam Ravi

6

ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ள படம் பூலோகம். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குத்துச்சண்டை வீரனை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தில் குத்துச்சண்டை வீரனாக ஜெயம் ரவியும், அவருக்கு ஜோடியாக திரிஷாவும் நடித்திருக்கிறார்கள்.

பிரகாஷ் ராஜ், ராஜேஷ், பொன்வண்ணன், ஆர்பிட் ரங்கா, சண்முகராஜன் ஆயோருடன், ஹாலிவுட் நடிகர் நாதன் ஜோன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். படல் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள விஜய்சாகர் இப்படத்திற்கு பாடல்கள் எழுதியிருக்கிறார்.

கல்யாண கிருஷ்ணன் இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையமைப்பில், எஸ்.ஆர். சதீஷ்குமாரின் ஒளிப்பதிவில் விரைவில் திரைக்கு வர உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடந்தது.

நிகழ்ச்சியில் பேசிய ஜெயம் ரவி, இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசியதாவது:-

பூலோகம் படம் பாக்சிங் சம்பந்தப்பட்டது. பேராண்மை படத்தில் நான் நடித்துக்கொண்டிருந்தபோதே இப்படத்தின் கதையை டைரக்டர் கல்யாண் என்னிடம் சொன்னார். ஆனால், கதைக்கேற்ப உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இதற்காக மிகவும் சிரமப்பட்டு 15 கிலோ எடையை கூட்டியிருக்கிறேன். 90 கிலோ எடை உடல்வாகுடன் இப்படம் முழுவதும் நடித்திருக்கிறேன்.

குறிப்பாக பாக்சிங் காட்சிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக முறைப்படி பாக்சிங் கற்றுக்கொண்டு நடித்தேன். 100 மடங்கு கஷ்டப்பட வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், பூலோகம் படத்திற்காக நாங்கள் 1000 மடங்கு கஷ்டப்பட்டு நடித்திருக்கிறோம்.

பாக்சிங் போட்டி மொத்தம் 12 ரவுண்டுகள் நடக்கும். ஆனால், என்னால் 2 ரவுண்டைக்கூட தாண்ட முடியவில்லை. கற்றுக்கொள்வது அவ்வளவு கடினமாக இருந்தது.

சாதாரணமாக பாக்சிங் சண்டைக் காட்சியை எடுக்க வேண்டும் என்றால் 6 பஞ்ச் அனுமதி. ஆனால் அந்த 6 பஞ்ச்சை மட்டும் வைத்து படத்தை ரசிக்கும்படியாக யதார்த்தமாக எடுத்துவிட முடியாது. எதற்காக சண்டை போடுகிறார் என்பதை வைத்து சொல்வதுதான் படத்தின் மையக்கரு. அதை அழகாக சொல்லியிருக்கிறோம். இதுதவிர முதல் முறையாக மயானக்கொள்ளை இப்படத்தில் பதிவு செய்யப்பட்டு, அதில் நான் நடித்திருக்கிறேன்.

கானா பாடல்கள் என்றால் இசையமைப்பாளர் தேவாவை மிஞ்ச முடியாது. ஆனால் இப்போது, அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா அதனை முறியடித்துள்ளார். பூலோகம் படத்தில் அவரது இசையமைப்பில் உருவாகியுள்ள ஒரு கானா பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகும்.

இவ்வாறு அவர் பேசினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *