Search

Who Bought Veeram Rights at Hindi ?

veeram

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ‘வீரம்’. இப்படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகி வெற்றியடைந்து வசூலிலும் சாதனை படைத்தது. இதில் அஜித்துக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார்.

தற்போது வீரம் இந்தியில் ரீமேக் ஆகிறது. அஜித் நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடிக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த ‘ஜெய் ஹோ’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அதில் அவர் தென்னிந்திய ரீமேக் திரைப்படங்களில் நடிப்பதில் தனக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்று கூறினார். இதை தொடர்ந்தே அவரை ‘வீரம்’ ரீமேக்கில் நடிக்க அணுகியுள்ளனர்.

இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை பிரித்திஷ் நந்தி வாங்கியுள்ளார். தமன்னா நடித்த கதாபாத்திரத்தில் இந்தியில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிக்கிறார். இவர்கள் மூவருடன் இணைந்து சிறுத்தை சிவா மும்பையில் உள்ள மெகபூப் ஸ்டூடியோவில் திரைக்கதையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆலோசனை செய்துள்ளார்.

தமிழில் ‘வீரம்’ வெற்றியடைந்தது போல் இந்தியிலும் பெரும் வெற்றி பெறும் என நம்புவோம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *