Search

Bollywood Director Anurag Kashyap About Bala Paradesi Movie

Jameson Empire Awards 2012

Bollywood Director Anurag Kashyap About Bala Paradesi Movie

வட இந்தியாவில் பாலாவின் ‘ப‌ரதேசி’.

பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் வெளியிடுகிறார்.

சென்னை,பிப்,10:

முன்னணி இயக்குனரான பாலாவின் ‘பரதேசி’ திரைப்படம் தமிழில் வெளியாவதோடு வட இந்தியாவிலும் வெளியாக உள்ளது.பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் பரதேசி படத்தை தனது நிறுவனம் மூலம் வட இந்தியாவில் வெளியிடுகிறார்.

சேது படத்தின் மூலம் அறிமுகமான பாலா, ‘நந்தா’,’பிதாமகன்’,’நான் கடவுள்’,’அவன் இவன்’ படங்களின் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறார்.புதுயுக இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் பாலா அகில இந்திய அளவில் பாராட்டப்படுபவர்.

இவரது இயக்கத்தில் உருவாகி உள்ள புதிய படமான பரதேசி தேயிலை தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.இதில் அதர்வா,தன்ஷிகா,வேதிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.ஜி.வி.பிர‌காஷ் இசை அமைத்துள்ளார்.

ஆங்கிலேயர் காலத்தில் தேயிலை தொழிலாளர்கள் சந்தித்த இன்னல்களை இதில் பாலா தனக்கே உரிய கலைநயத்தோடு பதிவு செய்திருக்கிறார்.

விரைவில் இந்த படம் வெளியாகிறது.இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் இந்த படத்தால் கவரப்பட்டு இதனை வட இந்தியா மற்றும் மத்திய இந்தியாவில் வெளியிட உள்ளார். ஆங்கில மற்றும் இந்தி மொழி சப் டைடில்களோடு ‘பரதேசி’ படத்தை தனது பேன்டம் பிலிம்ஸ் லிட் மூலம் அவர் வெளியிடுகிறார்.

அனுராக் காஷ்யப் ‘பிளேக் பிரைடே’,’தேவ் டி’ உள்ளிட்ட சிறந்த படங்களை இயக்கியவர்.அவரது சமீபத்திய படமாக ‘காங்ஸ் ஆப் வாஸ்யபர்’ அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான அனுராக் காஷ்யப் பாலாவின் ‘பரதேசி’ படத்தை வட இந்தியாவில் உள்ளவர்களும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காக அதனை அங்கு வெளியிட முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Director Bala needs no introduction. He was among the new wave of
film-makers who laid emphasis on meaningful cinema and provide
Tamil cinema with a new direction. Critical acclaim and national awards
followed and his reputation grew big time. Now, he is among the more
respected directors in the Tamil film world. The maker of movies like
‘Sethu’, ‘Nanda’ and ‘Pithamagan’ is now waiting for the release of
‘Paradesi’, a tale on the plight of tea estate workers.
On the other hand, Director Anurag Kashyap is a renowned Bollywood director,
whose recent movie ‘Gangs of Wasseypur’, which won a lot of praise. He is the man behind several movies including ‘Black Friday’ and ‘Dev D’ and among the new generation of Hindi film-makers who have taken
Bollywood projects to new highs .
Anurag Kashyap has shown interest in getting Bala’s ‘Paradesi’ to the
audiences in the central & the northern parts of India, The director plans to screen the film with English and Hindi sub-titles through
his company PHANTOM FILMS PVT Ltd., for the first time is releasing a Tamil film in Central & North India
Bala is waiting for the release of ‘Paradesi’ which stars Atharva,
Dhansika and Vedhika in key roles and takes a look at the plight tea
estate workers in pre-independence India. Like his previous films
which were realistic, dark and meaningful offerings, ‘Paradesi’
promises to be take a look at what trauma of tea estate labourers
under went in at the time of British occupation.
For more info on Anurag Kashyap’

http://www.akfpl.com/about-akfpl.html




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *