Search

Body for Hollywood and Hair For Bollywood – Madhavan

madhavan

கோலிவுட்டில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். இவர் தமிழில் கடைசியாக ‘வேட்டை’ என்ற படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்தார்.

இதையடுத்து, ஹாலிவுட்டில் ‘நைட் ஆப் தி லிலிங் டெட்’, ‘ஆர்ஜின்ஸ் 3டி’ ஆகிய படங்களில் நடித்தார். இப்படத்திற்காக ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து நடித்திருந்தார்.

இப்படங்களை தொடர்ந்து, இந்தியில் இவரும், கங்கனா ரனாவத்தும் நடித்த ‘தனு வெட்ஸ் மனு’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார். இப்படத்துக்காக தாடி வளர்த்து புதிய கெட்டப்பில் நடிக்கிறார் மாதவன். தாடி மட்டுமில்லாமல் நீளமான முடியும் வைத்து வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார்.

மாதவன் தமிழில் ‘இறுதிச்சுற்று’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இப்படத்தில் பாக்ஸராக நடித்து வருகிறார். இதற்காக முறைப்படி பாக்சிங் கற்றுக் கொண்டு நடித்து வருகிறார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *