Search

Bharath talks about his ATSVS Film

bharath

பரத், நந்திதா ஜோடியாக நடித்துள்ள படம் ‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’. ராஜம் புரொடக்ஷன்ஸ் சார்பில் புஷ்பாகந்தசாமி, மோகன் ஆகியோர் தயாரித்து உள்ளனர். வருகிற 22–ந்தேதி இப்படம் ரிலீசாகிறது.

படம் குறித்து பரத் கூறியதாவது:–

ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி ஜாலியான காமெடி படம். தமிழில் காமெடி படங்கள்தான் நன்றாக ஓடுகின்றன. ரசிகர்கள் அதுபோன்ற படங்களையே விரும்பி பார்க்கிறார்கள். இந்த படமும் அப்படியே வந்துள்ளது.

காதல், காமெடி, நடனம், சண்டை என எல்லாமும் இருக்கும். 27 காமெடி நடிகர்கள் உள்ளனர். படம் முழுவதும் தொய்வின்றி கலகலப்பாக நகரும். இந்த படத்தில் யாரையும் புண்படுத்துவது போன்ற காட்சிகள் இல்லை.

‘சித்த வைத்தியம்’ மீது இளம் தலைமுறையினருக்கு எதிர்முறையான எண்ணம் உள்ளது. அதை இந்த படம் மாற்றும். சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை பறைசாற்றும் படமாகவும் இருக்கும். கதையில் ஒரு பகுதியாக தான் சித்த மருத்துவம் இருக்கும். மற்றபடி இது முழு நீள காமெடி படம்.

இவ்வாறு பரத் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *