Search
Tamil cinema news portal – Exclusive of cinema, the gossips & the real truth.

Babu Ganesh escaped from Car Wheel Blast

babu-ganesh

‘கடல் புறா’ என்ற படத்தில் பாபு கணேஷ் நாயகனாக நடித்துள்ளார். இவரே இப்படத்தை இயக்கவும் செய்தார். தாட்பூட், தஞ்சாவூர், தேசிய பறவை, நடிகை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது காட்டு புறா என்ற பேய் படத்தை இயக்கி நாயகனாகவும் நடிக்கிறார்.

இந்த படத்துக்காக லொக்கேஷன் பார்ப்பதற்காக பாபுகணேசும் படத்தின் ஒளிப்பதிவாளர் ரவியும் கிருஷ்ணகிரி சென்றனர். இரவு 12 மணிக்கு காரில் கிருஷ்ணகிரியில் உள்ள பெங்களூர் நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது திடீரென காரின் இடது பக்க டயர் வெடித்தது. இதனால் கார் நிலை தடுமாறி தாருமாறாக ஓடி ஓரத்தில் இருந்த மரத்தின் மேல் மோதியது.

இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. பாபு கணேசும், கேமரா மேனும் தலை, மார்பு பகுதியில் பலத்த அடிப்பட்டு காயத்துடன் மயங்கி விழுந்தார். அருகில் வீடுகளில் இருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *