Search

Ask About Beep Song to Rajini Says Gangai Amaran

illayaraja

சென்னை வெள்ள நிவாரணம் சார்ந்த பாராட்டு விழாவில் இளையராஜா கலந்துகொண்டபோது, சிம்புவின் பீப் பாடல் குறித்து கேள்வியை செய்தியாளர் எழுப்ப இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதம் தற்பொழுது பரபரப்புடன் பேசப்பட்டுவருகிறது.

இந்நிலையில் இசையமைப்பாளர் கங்கைஅமரன் இதுபற்றி சமுகவலைதளத்தில் கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார். அதில், “ இளையராஜா போன்ற இசைப்பெரியோர்களிடம் எதைப்பற்றி கருத்துகள் கேட்பது என்ற வரம்பு வேண்டும். அவர் இசையமைத்த பாடல்களையே அவர் கேட்டு நான் பார்த்ததில்லை இந்த முட்டா பீப் பசங்க போட்ட பாட்ட பத்தி அவர் கிட்ட கேட்டது எனக்கு புடிக்கல.

ஏன் ரஜினி சாரோட சொந்தக்காரப் பையன் தானே அனிருத்து…? அவரக்கேளுங்க ஏன் தமிழ் தமிழ்னு உசுர விடராரே அந்த வெங்காயத்தோட அப்பா டி ஆர். அவங்க அபிப்ராயம் என்னன்னு கேட்டுப் போடுங்க என் அன்புக்குரிய பத்திரிகை நண்பர்களே உண்மையாக உயர்ந்தோரை உள்ளம் கொதிக்க வைக்க வேண்டாம்” இவ்வாறு கங்கைஅமரன் கூறியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *