Search

Asin not Bought Home from Salman Khan

asin-salmankhan

சல்மான்கானிடம் அசின் வீடு பரிசாக வாங்கவில்லை என்று அவரது உவியாளர் மறுத்துள்ளார். அசின் இந்தியில் சல்மான்கானுடன் ‘லண்டன் டிரீம்ஸ்’ படத்தில் நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இருவரும் காதலிப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவின.

அசினுக்கு பல கோடி மதிப்பிலான வீடு ஒன்றை வாங்கி காதல் பரிசாக சல்மான்கான் கொடுத்து இருப்பதாகவும் செய்திகள் பரவியது. இப்போதும் அவர்கள் அடிக்கடி தனிமையில் சந்திப்பதாக இந்தி பட உலகினர் முணு முணுக்கின்றனர்.

இதனை அசின் உதவியாளர் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:–

அசினுக்கு சல்மான்கான் வீடு ஒன்றை பரிசாக கொடுத்தார் என்பது பழைய வதந்தி. ‘லண்டன் டிரீம்ஸ்’ படத்தில் நடித்தபோது இது வெளியானது. இப்போது மீண்டும் அந்த வதந்தியை கிளப்பி விட்டுள்ளனர். இதில் உண்மை இல்லை. அசினும் சல்மான்கானும் நல்ல நண்பர்கள். அசினுக்கு சல்மான்கான் வீடு எதுவும் வாங்கி கொடுக்கவில்லை. இதை சட்டப்படி தன்னிடம் உள்ள தஸ்தாவேஜுகள் மூலம் அவரால் நிரூபிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *