ஆசியாவில் டுவிட்டரில் அதிகப்படியான நபர்களால் பின்தொடரப்படும் பெண்களின் பட்டியலில் நடிகை தீபிகா படுகோனேக்கு 2-வது இடம் கிடைத்திருக்கிறது.
ஆசியாவில் டுவிட்டரில் அதிகப்படியான நபர்களால் பின்பற்றப்படும் முதல் பெண்மணி என்ற பெருமையை இந்தோனேஷியா நாட்டின் பாடகியும், நடிகையும் ஆன ஆக்னஸ் மோ பெற்றுள்ளார். 1 கோடியே 45 லட்சம் பேர் அவரை பின்தொடர்கின்றனர்.
அவருக்கு அடுத்த படியாக நடிகை தீபிகா படுகோனே, 1 கோடியே 25 லட்சம் ரசிகர்களுடன் இரண்டாவது இடத்திலும், நடிகை பிரியங்கா சோப்ரா 1 கோடியே 20 லட்சம் ரசிகர்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள அவர் இதுபற்றி டுவிட்டரில், நீங்கள் எல்லாரும் தான் என்னுடைய பலம். உங்கள் அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டிருக்கிறார்.